முகப்பு சினிமா `பிஸ்கட் வாங்க சென்ற இளைஞர்; ஊரடங்கை மீறியதாகத் தாக்கிய காவலர்கள்’ - 3 நாள்கள் கழித்து...

`பிஸ்கட் வாங்க சென்ற இளைஞர்; ஊரடங்கை மீறியதாகத் தாக்கிய காவலர்கள்’ – 3 நாள்கள் கழித்து நடந்த சோகம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், வெளியில் செல்லலாம் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தடையை மீறி வெளியில் வருவோரை காவல்துறையினர் கண்டித்து வீட்டிற்கு அனுப்புகின்றனர். சில இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்புகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த 22 வயது வாலிபர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image

உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது தினக்கூலி ரிஸ்வான் அஹமத். பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்குச் சென்றபோது , வழியில் தடுத்து நிறுத்திய காவலர்கள் அந்த வாலிபரை அடித்துள்ளனர். இச்சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கழித்து ரிஸ்வான் அகமது உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த ரிஸ்வானின் தந்தை இஸ்மாயில் கூறுகையில்,“என் மகன் அம்பேத்கர் நகரில் உள்ள ஜஷாபூர் பகுதியில் உள்ள கடைக்கு வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக ஏப்ரல் 15-ம் தேதி மாலை 4 மணி அளவில் சென்றிருந்தான். செல்லும் வழியில் தபால் அலுவலகம் அருகில் இருந்த ஒரு பெண் காவல் அதிகாரியும், சில காவலர்களும் அவனைத் தடுத்து நிறுத்தி கடுமையாக அடித்துள்ளனர். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டன” என்று கூறினார். ரியாஸின் உறவினர் `காவஅவனுக்குப் பசிக்கிறது என்று பிஸ்கட் வாங்கச் செல்வதாக என்னிடம் கூறினான்’ என்றார்.

இஸ்மாயில்

ஊரடங்கின் காரணமாக ரிஸ்வானின் காயங்களுக்கு வீட்டிலேயே கை வைத்தியத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவரை அஜாபூரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள், அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை ரிஸ்வான் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவினாஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், “இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்ற இளைஞருக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...