முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் புதுக்கோட்டையில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்..! பெண்கள் கதறல்...

புதுக்கோட்டையில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்..! பெண்கள் கதறல்…

மாவட்டம் அருகே சாலையில் வேகத்தடை அமைத்ததால் ஏற்பட்டது இதில் காயமடைந்த 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கன்னியான் கொல்லை கிராமத்தில் தங்கள் பகுதியின் வழியே செல்லும் சாலையில் பட்டியல் இனத்து மக்கள் வேகத்தடை அமைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அருகேயுள்ள வானக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்து மக்கள் அந்த வேகத்தடையை உடைத்துள்ளனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் இரு தரப்பினரும் கம்பு மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கிக்கொண்டனர்.

இதில் படுகாயமடைந்த 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா போன்ற பேரிடர் ஒருமுறை வந்து தாக்கத்தை ஏற்படுத்துவிட்டு சென்றாலும், காலகாலமாக சாதியால் வேறுபட்டு சண்டையிட்டுக்கொள்ளும் மனிதர்களால் தமிழ்நாட்டுக்கு பெரும் அவலம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...