முகப்பு சினிமா புதுக்கோட்டை: `ஃபாலோ அப்; மாற்றுச் சாவி!’- டூவிலர் கொள்ளையில் சிக்கிய 16 வயது சிறுவன்

புதுக்கோட்டை: `ஃபாலோ அப்; மாற்றுச் சாவி!’- டூவிலர் கொள்ளையில் சிக்கிய 16 வயது சிறுவன்

புதுக்கோட்டையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள், அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. குறிப்பாக, கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து வாகனங்கள் திருடுபோயின. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் கணேஷ் நகர் போலீஸாரிடம் புகார்களை அடுக்க, உடனே போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இருசக்கர கொள்ளையர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்ட போலீஸார், புதுக்கோட்டை– தஞ்சாவூர் பிரதான சாலை, அண்டக்குளம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருடுபோனதாகப் புகார் கொடுக்கப்பட்ட வாகனத்தில் புதுக்கோட்டை – தஞ்சை சாலையில் வந்த 16 வயது சிறுவனை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அப்போது, இந்த வாகனம் மட்டுமில்லாமல், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களைத் திருடியதாகக் கூறி, போலீஸாருக்கே அதிர்ச்சிக் கொடுத்தான். திருடிய வாகனங்களைத் தெரிந்தவர்களிடம் அடகு வைத்துவிட்டு, அந்தப் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பர செலவுகள் செய்துவந்ததாகவும் கூறினான். 8 இருசக்கர வாகனங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து போலீஸார் பறிமுதல்செய்தனர்.

அதன்பின்பு, சிறுவனைக் கைதுசெய்த போலீஸார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில்தான் சிறுவனை சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோர்களை அழைத்து, சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கிய போலீஸார், சிறுவனை பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். 16 வயது சிறுவன், 8-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிடிபட்ட E-PASS `கொள்ளை’யர்கள்… பொறிவைத்துப் பிடித்த காவல்துறையும் விகடனும்!

இதுபற்றி போலீஸார் கூறும்போது, “ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில்தான் சிறுவன் இருசக்கர வாகனங்களைக் குறி வைத்துத் திருடியுள்ளான். திருடிய வாகனங்களைத் தெரிந்தவர்களிடம் அடகுவைத்து, அவர்களிடம் குறைந்தபட்ச தொகையை வாங்கியிருக்கிறான். தொடர்ந்து வாகனங்களை ஃபாலோஅப் செய்து, மாற்றுச் சாவிகளைப் போட்டுப் பார்த்து, உரிமையாளருக்குத் தெரியாத வகையில் திருடிச் சென்றுள்ளார். சில வண்டிகளைப் பகலிலேயே திருடி இருக்கிறார். அனைத்து வண்டிகளையும் மீட்டுவிட்டோம். சிறுவனுக்கு புத்திமதிகளைக் கூறி அனுப்பிவைத்திருக்கிறோம். தொடர்ந்து, இதுற்றி விசாரித்துவருகிறோம்” என்றார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...