முகப்பு சினிமா `புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ - உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!

உச்ச நீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும், தொழிலாளர்களின் பயணச் செலவுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலைக்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம் என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

24 மணி நேரத்தில் 6,556 பேருக்கு நோய்த் தொற்று!

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,556 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58, 33ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 194 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read: `11 நகரங்கள்தான் டார்கெட்; திறக்கப்படும் கோயில்கள்!’ – எப்படி இருக்கும் 5-ம் கட்ட ஊரடங்கு?

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...