முகப்பு சினிமா `பூனை, அணிலை சித்ரவதை செய்து டிக் டாக் வீடியோ' - விபரீத இளைஞரை வளைத்த நெல்லை...

`பூனை, அணிலை சித்ரவதை செய்து டிக் டாக் வீடியோ’ – விபரீத இளைஞரை வளைத்த நெல்லை போலீஸ்

தமிழகத்தில் டிக் டாக் செயலியின் மூலம் பல்வேறு விபரீதச் செயல்கள் நடப்பதால் அந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று கோரும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. அதில் பதிவிடப்படும் சில புகைப்படங்களும் வீடியோக்களும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

டிக் டாக்

அந்த வரிசையில், நெல்லை மாவட்டத்தில் நாய்களுடன் முயல் வேட்டையாடுவது, நாயை விட்டு முயலைக் கடிக்க விடுவது, மான் கறி சமைத்துச் சாப்பிடுவது, காட்டுக்குள் அத்துமீறிச் சென்று வீடியோ எடுப்பது, காவல்நிலையங்கள் முன்பாக டிக் டாக் பதிவு செய்வது போன்ற சர்ச்சைகள் ஏற்கெனவே நடந்துள்ளன.

Also Read: ’டிக் டாக்’ திருமணம்… வேகம் பிடித்த பைக் பயணம்… – போலீஸிடம் சிக்கிய புதுமணத் தம்பதி!

இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனாலும் சிலர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

டிக் டாக் வெளியிட்ட தங்கராஜ்

நெல்லை-குமரி மாவட்ட எல்லையில் உள்ள பழவூர் கிராமத்தில் சுயம்புலிங்கம் என்பவர் 30-க்கும் அதிகமான பால் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். அவரின் மகன் தங்கராஜ் என்பவர் பால் மாடுகளைப் பராமரிக்கவும் பால் வியாபாரம் செய்யவும் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.

19 வயது இளைஞரான தங்கராஜ், மாடுகளைப் பராமரிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் டிக் டாக் செயலியில் வீடியோக்களைப் பதிவிடுவதையே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். தான் டிக் டாக் செயலியில் அனைவராலும் கவனிக்கப்படும் நபராக இருக்க வேண்டும் என விரும்பிய தங்கராஜ், ஒரு அணிலையும் பூனையையும் பிடித்து தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றுள்ளார். 

டிக் டாக் சர்ச்சை

அந்தக் கொடூரக் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்த அவர் டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்ததுடன் பழவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். இதையடுத்துப் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...