முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பெட்ரோல் விலை: அட, இன்னைக்கு என்னாச்சு தெரியுமா?

பெட்ரோல் விலை: அட, இன்னைக்கு என்னாச்சு தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

இம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை சமீபத்தில் பெருமளவு சரிவைச் சந்தித்து வந்தது. கச்சா எண்ணெய் விலை குறைவதைத் தொடர்ந்து மேலும் விலையை குறைக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த காலங்களில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலையைப் பொறுத்தவரை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இன்றும் அதேபோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.28ஆக விற்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் காணாமல் லிட்டருக்கு ரூ.65.71 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில் மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...