முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் பெட்ரோல் விலை: இன்னைக்கு எத்தனையாவது நாள் தெரியுமா?

பெட்ரோல் விலை: இன்னைக்கு எத்தனையாவது நாள் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதேசமயம் சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

இம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை சமீபத்தில் பெருமளவு சரிவைச் சந்தித்து வந்தது. கச்சா எண்ணெய் விலை குறைவதைத் தொடர்ந்து மேலும் விலையை குறைக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பிரதமர் மோடி மே 3 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். இந்த காலங்களில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலையைப் பொறுத்தவரை கடந்த 41 நாள்களாக மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இன்றும் அதேபோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.28ஆக விற்கப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் காணாமல் லிட்டருக்கு ரூ.65.71 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில் மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...