முகப்பு விளையாட்டு பேட்மின்டன் நட்சத்திரம் லின் டான் திடீர் ஓய்வு

பேட்மின்டன் நட்சத்திரம் லின் டான் திடீர் ஓய்வு

பெய்ஜிங்: பேட்மின்டன் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற  சீன வீரர் லின் டான், ஒலிம்பிக் போட்டி தள்ளிப் போனதையடுத்து விளையாட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த பேட்மின்டன் வீரர் லின் டான் (37).   லின் தனது 17வது வயதில்  ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதுடன் தனது பதக்க வேட்டையை தொடங்கினார். அதன்பிறகு பேட்மின்டன் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய லின்,  உலக சாம்பியன் போட்டியில்  2006, 2007, 2009, 2011, 2013 என 5முறை தங்கமும்,  2005, 2017ம் ஆண்டுகளில் வெளிப்பதக்கமும் வென்றுள்ளார். இப்படி 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன் 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில்  தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம், 2வெள்ளி, ஒரு வெண்கல  பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.  அதுமட்டுமல்ல  உலக கோப்பையை 2 முறையும் சுதிர்மன், தாமஸ் கோப்பைகள் என  சர்வதேச அரங்கில்  லின் சாதித்தவை ஏராளம்.இந்நிலையில்  இம்மாதம்  ஜப்பான் தலைநகர்  டோக்கியாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இருந்தார். ஆனால்  கொரோனா  பீதி காரணமாக பயிற்சி செய்ய முடியாமல் தவித்தார்.  போதாதற்கு டோக்கியோ ஒலிம்பிக்கும் அடுத்த ஆண்டு ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 3வது தங்கம் வென்று ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் போட்டி இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டதால்,  தனது ஓய்வை திடீரென  அறிவித்துள்ளார்.  ‘எனக்கு பிடித்த விளையாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். இந்த 20 ஆண்டுகளில்  எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், ரசிகர்கள்  மகிழ்ச்சியான நேரங்களில், கடினமான தருணங்களில் என்னுடனேயே இருந்தனர். எனக்கு இப்போது 37வயதாகிறது. இனி என் உடல்தகுதி  மேலும்  என்னை போராட அனுமதிக்காது.  அதனால் ஓய்வு பெறுகிறேன். ஆனால்  விளையாட்டை  ஒருபோதும் விட்டு விட மாட்டேன்’ என்று லின் கூறியுள்ளார்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...