முகப்பு சினிமா `ப்ளீஸ்.. எங்க மம்மி டாடியை டிரான்ஸ்ஃபர் பண்ணுங்க'-118 அரசு டாக்டர்களின் குழந்தைகள் அனுப்பிய வீடியோ

`ப்ளீஸ்.. எங்க மம்மி டாடியை டிரான்ஸ்ஃபர் பண்ணுங்க’-118 அரசு டாக்டர்களின் குழந்தைகள் அனுப்பிய வீடியோ

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். அதனால் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தனிமனித கவச உடைகளை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவிவருகிறது. தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றுவதால், அவர்கள் நடமாடும் தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர்.

கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள்

தூய்மைப் பணியாளர்களுக்கு பல இடங்களில் பாத பூஜையும் சால்வை அணிவித்து மரியாதையும் அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்ற மனக்குமுறல் கொரோனா வார்டுகளில் கேட்கிறது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களை நிஜ ஹீரோக்கள் என்று பாராட்டும் அரசு, அவர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வியை அரசு மருத்துவர்கள் கேட்கின்றனர். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆந்திர மாநில டாக்டர், சென்னை டாக்டர் என இருவர் சென்னையில் மரணமடைந்தனர். நீலகிரியில், மலைவாழ் கிராமத்தில் பணியாற்றிய அரசு டாக்டர் உயிரிழந்தார். அவரின் இறுதி அஞ்சலியின்போதும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது டாக்டர், கொரொனாவால் இறக்கவில்லை என்று இறப்பு சான்றிதழை காட்டியபிறகு, இறுதி அஞ்சலி அமைதியாக நடந்தது.

சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆந்திர மாநில டாக்டரின் சடலத்தை திருவேற்காடு, அம்பத்தூர் மயானங்களில் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, சென்னை வளசரவாக்கத்தில் ஆந்திர மாநில டாக்டரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சென்னையில் தனியார் மருத்துவமனை நடத்திய 55 வயதுடைய டாக்டர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார். பிரபலமான அந்த டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த மோதலில் ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்டு, டிரைவர்கள் தாக்கப்பட்டனர். மாநகரட்சி செயற்பொறியாளர், மாநகராட்சி உதவிப் பொறியாளர் என 7 பேர் தாக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அடக்கம் செய்யப்படும் டாக்டர்

இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் 21 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்தச் சூழலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் 118 அரசு மருத்துவர்களின் குழந்தைகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவில், `ப்ளீஸ் எங்க மம்மி, டாடியை டிரான்ஸ்ஃபர் பண்ணுங்க’ என்று மழலை மொழியில் உருக்கமாகக் கூறியுள்ளனர். இந்த வீடியோவுக்கு அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், “அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்குப் பிறகு, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 118 டாக்டர்கள் 300 கி.மீட்டர் முதல் 700 கி.மீட்டர் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை நிபந்தனையின்றி கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்பினால், அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதனால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்பினோம். ஆனால், 15,000 மருத்துவர்கள் பங்கேற்ற போராட்டத்தில் 118 மருத்துவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றம், பணியிட மாற்றத்தை ரத்து செய்வதோடு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி உத்தரவிட்ட பிறகும் ஏனோ அரசு அமைதியாக இருந்துவருகிறது.

கொரோனா சிகிச்சை வார்டு

இன்றைய சூழலில் குடும்பம், குழந்தைகளை மறந்து வெளியூர்களில் அநாதைகளைப் போல இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் பணி செய்துவருகிறோம். நீதிமன்ற உத்தரவின்படி 118 அரசு டாக்டர்களையும் பழைய இடத்தில் பணியமர்த்தினால் இன்னும் உற்சாகமாக பணியாற்ற முடியும். மேலும், ஊதிய உயர்வை அமல்படுத்த தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்தான் கூடுதலாகச் செலவாகும். அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டதுதான் அரசு மருத்துவர்கள் செய்த தவறா… அதிலும் இடமாற்றம் செய்யப்பட்ட 118 டாக்டர்கள் என்ன தவறு செய்தார்கள்? எனவே, இடமாற்றம் செய்யப்பட்ட 118 அரசு டாக்டர்களும் முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளோம். இப்போது செய்யாவிட்டால் எப்போது அரசு நடவடிக்கை எடுக்கும்? விரைவில் முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் சுகாதாரத்துறை செயலாளரும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்” என்றனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...