முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மக்கள் ஊரடங்கால் கொரோனா அதிகரிக்குமா, குறையுமா?

மக்கள் ஊரடங்கால் கொரோனா அதிகரிக்குமா, குறையுமா?

தன் கோர முகத்தை உலகம் முழுவதும் காட்டி வருகிறது. உலகளவில் தற்போதுவரை இந்த கொடிய தொற்றால் 11 ஆயிரத்து 820 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்து 82 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் 298 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவுவது பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மூன்றாவது நிலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர் பயன்படுத்திய இடங்கள், பொருள்களில் 12 மணிநேரம் வரை அந்த வைரஸ் செயல்படும். அதன்பின்னர் அது செயலிழந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்கள், பொதுப் போக்குவரத்து என 12 மணி நேரத்தை மக்கள் பயன்படுத்தாமல் விடும்போது அதன்மூலம் கொரோனா தொற்று அடுத்தகட்டத்திற்கு நகராமல் தடுக்க முடியும்.

பிரதமரின் அறிவிப்புக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஏற்கெனவே மார்ச் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

நாளை மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவை, பேருந்து சேவை, விமான சேவை அகியவை நிறுத்தப்பட்டுள்ளன. காய்கறி சந்தைகள், கடைகள், உணவகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை அன்று ஒருநாள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கு நாடே ஒத்துழைப்பு நல்கத் தயாராகிவரும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பு மேலும் கொரோனா பரவலை ஏற்படுத்த்துவதற்கான காரணியாக அமைந்துவிடுமோ என்ற பயமும் எழாமல் இல்லை.

இந்த திடீர் ஊரடங்கு உத்தரவு மூலம் தொழில் நிமித்தமாக வேறு ஊர்களில் தங்கியிருப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான உணவு உள்ளிட்டவைகளைக்கூட பெற முடியாமல் போகும் சூழல் நிலவுவதால் நேற்றும் இன்றும் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்துநிலையங்கள், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியூருக்கு செல்கின்றனர். இடம் பிடிப்பதற்காக முண்டி அடிக்கின்றனர்.

பொது இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கூறிவரும் நிலையில் இந்த முண்டியடிப்பு அத்தனையும் தூள் தூளாக்கிவிட்டது.

ரயில்வே அமைச்சகமே தனது ட்விட்டர் பக்கத்தில் ரயில் பயணம் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பனதல்ல என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மார்ச் 10ஆம் தேதி டெல்லியிலிருந்து ரயிலில் வந்துள்ளார். அவர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் பயணித்த 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நேரங்களில் பயணத்தைத் தவிர்க்குமாறு அரசு தொடர்ந்து கூறிவந்தாலும் திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு அசாதாரன சூழல் இருப்பதாக உணரச் செய்து அனைவரையும் சொந்த ஊரை நோக்கி விரட்டுவது ஏற்புடையதல்ல என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் கேட்கின்றன.

சாதாரண ஞாயிற்றுக் கிழமையாக கடந்து போயிருக்க வேண்டிய தினத்தை இப்படியொரு அறிவிப்பு பண்டிகை கால போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்பு இனிவரும் நாள்களில் எதிரொலிக்கும் என்கின்றனர்.

நாளைய தினம் முகூர்த்த நாள். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக நாடு முழுவதும் பல குடும்பங்கள் பல மாதங்களாக ஏற்பாடுகளை செய்திருக்கும். இந்நிலையில் மக்கள் ஊரடங்கு உத்தரவு மூலம் பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்களாவது இந்த மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது யாருக்காகவோ அல்ல, நம்முடைய, நம்மைச் சார்ந்தவர்களின் உடல் நலத்திற்காகத்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. விடுமுறை தினக் கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளாமல் குடும்பத்தினருடன் வீட்டிலேயே நேரம் செலவிடுவதற்கான காலமாக எடுத்துக்கொள்ளலாம்.

இணையம் உலகையே சுருட்டி நம் கையில் வைத்து விட்ட நிலையில் வீட்டிலிருந்தபடியே சொந்தங்களோடு ஸ்கைப்பில் உரையாடலாம். குழந்தைகளோடு வீட்டினுள் விளையாடி மகிழலாம். கணவன், மனைவி காதல் கதைகளை பரிமாறிக் கொள்ளலாம். பழைய ஆல்பங்களை புரட்டி கடந்த காலத்திற்கு சென்று திரும்பலாம். வீட்டை விட்டு வெளியே சென்றுதான் பயணம் மேற்கொள்ள வேண்டுமா என்ன புத்தகங்கள் மூலம் வேறு உலகத்தில் சஞ்சரிக்கலாம். இத்தனை வசதிகள் நிறைந்துகிடக்க, திரையரங்குகள் மூடிக்கிடக்கிறதே, கடற்கரைக்கு செல்ல முடியாதே என்ற கவலைகளை தூர எறிந்துவிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கலாம்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...