முகப்பு சினிமா `மம்தாவுக்கு உதவ சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றாரா பி.கே?’ -72 மணிநேர சிசிடிவி காட்சிகள்...

`மம்தாவுக்கு உதவ சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றாரா பி.கே?’ -72 மணிநேர சிசிடிவி காட்சிகள் ஆய்வு

இந்தியாவில் நடக்கும் அரசியலை கவனித்து வரும் அனைவருக்கும் பி.கே எனும் பிரசாந்த் கிஷோரை தெரியாமல் இருக்காது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அங்கும் இங்குமாய் பேசப்பட்டு வந்தவர், 2019 -ம் ஆண்டு ஆந்திராவில் ஜெகனின் வெற்றிக்குப் பின்னர் தென் இந்தியாவிலும் பிரபலம் ஆனார். 2019 -ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலன திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைபற்றி இருந்த போதும், பா.ஜ.க கடுமையான போட்டியை அளிந்த்திருந்தது. அப்படியான தேர்தல் முடிவுகளை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் மம்தா, 2021 சட்டப்பேர்வை தேர்தலில் தனது கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய, தேர்தல் வித்தகரான பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்தார்.

ஸ்டாலின் – பிரசாந்த் கிஷோர்

தமிழகத்திலும் ம.நீ.ம, அ.தி.மு.க, தி.மு.க என ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பி.கே பேச்சுவார்த்தையில் இருந்தாலும் இறுதியில் தி.மு.க வுடன் ஒப்பந்தம் உறுதியானது. இப்படி இந்தியா முழுவதும் பி.கே மிகப் பிரபலம். பீகாரில், நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல், சமீபத்தில் பி.கே வை தேசிய அளவில் பேச வைத்தது. இந்த நிலையில் தற்போது அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு உதவ, ஊரடங்கு உத்தரவை மீறி சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றதாக தகவல் வெளியானது.

Also Read: `நாங்க வேண்டாம்.. எங்க டேட்டா மட்டும் வேணுமா?’- பி.கே-வுக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க ஐ.டி விங்

கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில், மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவியதாக சொல்லப்படுகிறது. மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், ஊரடங்கை வெற்றிகரமாக நடத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்ததாகவும் மாநில பா.ஜ.க குற்றம்சாட்டியது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உண்மையான களநிலவரத்தை அறிய, அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவை மேற்குவங்கத்தில் கொல்கத்தா, ஹவுரா, மெடினிப்பூர், பர்கனாஸ், டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய அனுப்புவதாக தெரிவித்தது உள்துறை.

மம்தா பானர்ஜி

இந்த நிலையில் தான், மத்திய குழுவை சமாளிக்க மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோரை உடனடியாக கொல்கத்த வர வேண்டும் என அழைத்ததாகவும், இதனால் டெல்லியில் இருந்து ஊரடங்கு உத்தரவுகளை மீறி, சரக்குகளை ஏற்றி செல்லும் கார்கோ விமானம் மூலம் அவர் கொல்கத்தா சென்றாதாகவும் தகவல்கள் வெளியானது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து விமான சேவைகளும், ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளன்றி சாலை மார்க்கமாக செல்வதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானம் மட்டுமே அத்தியாவசிய பொருள்களை எடுத்து சென்று வருகிறது.

அதனால் தான் பிரசாந்த் கிஷோர் கார்கோ விமானத்தில் சென்றதாக தகவல் பரவியது. இந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக ஆய்வு செய்ய சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், மத்திய அரசின் உத்தரவின் பெயரில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூன்று விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 72 மணிநேர காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், அவர் வான் வழியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தை தெரிவித்தனர்.

பிரசாந்த் கிஷோர்

இது தொடர்பாக சில ஆங்கில ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ள பிரசாந்த் கிஷோர், ஊரடங்கை மீறி கார்கோ விமானம் மூலம் தான் பயணம் செய்ததாக வெளியான அனைத்து தகவலையும் மறுத்தார். “நான் எந்த விமானத்திலும் பயணம் செய்யவில்லை. கடைசியாக நான் விமான நிலையம் சென்றது மார்ச் மாதம் 19 -ம் தேதி அன்று தான். தற்போது என்ன சொல்லப்படுகிறது என்பதை பார்ப்போம். மத்திய அரசு ஒரு அறிக்கை கேட்டிருக்கிறது. யாரிடமாவது ஆதாரம் இருந்தால் அவர்கள் வெளியே வந்து அதனை தெரிவிக்க வேண்டும். அப்போது தானே நான் பதில் சொல்ல முடியும்” என்றார்.

கடந்த சில நாள்களில் சாலை மார்க்கமாக கொல்கத்தா சென்றீர்களா என `தி ப்ரிண்ட்’ ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர்

ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “என் மீது பழி சொல்பவர்கள் அதனை உறுதிபடுத்த வேண்டும். நான் விமானத்தில் சென்றாதாக சொல்பவர்கள் குறைந்தபட்சம் விமான நம்பரையோ, விமான நிறுவனத்தின் பெயரையோ தேதியையோ நேரத்தையோ குறிப்பிட வேண்டாமா? பொதுவெளியில் இது போன்ற குற்றச்சாட்டை வைப்பவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...