முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் `மருத்துவர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்!’ - பேராயர் அறிவிப்பு #NowAtVikatan

`மருத்துவர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்!’ – பேராயர் அறிவிப்பு #NowAtVikatan

8 லட்சம் பாதிப்பு; 45,000-ஐ நெருங்கும் இறப்பு! #Corona

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது. திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை இரவு வரை மட்டும் அங்கு 40,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது..!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18,985-லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 603-லிருந்து 640ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,218 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 722 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்றும், அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரான சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

அரசு வழங்கும் அரிசியை மக்களுக்கு வழங்க கோரிக்கை!

மாவட்ட ஆட்சியருடன் ஜமாத் நிர்வாகிகள்

தற்போது கொரானோ தாக்கத்தின் விளைவாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயார் செய்ய வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அந்தந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் பச்சரிசியை ஜமாத் நிர்வாகிகள் பெற்று அதை அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஆலோசனை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினர், பச்சரிசியை வீடுகளுக்குப் பிரித்து வழங்குவதன் மூலம் வீடுகளில் நோன்புக் கஞ்சி தயார் செய்ய இயலாது. அரிசி மட்டுமே அரசு வழங்கி வரும் நிலையில் நோன்புக் கஞ்சிக்குத் தேவையான மற்ற துணைப் பொருள்கள் இல்லாமல் வீடுகளில் கஞ்சி தயார் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு நோன்புக் கஞ்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 417 டன் பச்சரிசியை அனைத்து முஸ்லிம் ஜமாத்துகள் சார்பில், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிடும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.50 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்புப் பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உட்பட அனைத்துத் துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை!

கொரோனா தடுப்புப் பணியில் முன்னின்று போராடுபவர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள். நாட்டில் சில பகுதிகளில் மருத்துவர்கள் மீதும் சுகாதாரப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்களைக் காக்க, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் மீதான வன்முறை எந்த வகையில் இருந்தாலும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்தக் குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது எனவும் 30 நாள்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.

மானுடத்தின் மறு உருவாக்கம்!

மானுடத்தின் மறு உருவாக்கம்…

இந்த வார ஆனந்தவிகடனில்

Art by Hasif Khan

#SaveDoctors #Corona #hasiftoon #AVcartoon #AnandaVikatan #SubmitYourAVcaption

Posted by Ananda Vikatan on Tuesday, April 21, 2020

மேலும் 33 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறையின் அறிவிப்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் – 1,629 பேர்.

குணமடைந்தோர் – 662

மருத்துவமனையில் இருப்போர் – 946

கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்!

கொரோனா தொற்றால் இறந்த டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி, வீடியோ மூலம் முதல்வருக்கு கேரிக்கை ஒன்றை வைத்திருந்தார். `என் கணவர் டாக்டர் சைமன், 19-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அவங்களை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய ஃபாதர் அனுமதி கொடுத்தாங்க. ஒரு சில சம்பவத்தின் காரணமாக அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டார்.

வேலங்காட்டில் டாக்டர். சைமன் புதைக்கப்பட்ட இடம்

புதைக்கப்படும்போதுகூட எங்க கண்களால் பார்க்க முடியல. மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த என் கணவருக்கு வென்டிலேட்டர் பொருத்துவதற்கு முன்பு வீடியோ காலில் என்னிடமும் குழந்தைகளிடமும் பேசினாங்க. அதில், ‘ஒரு வேளை நான் திரும்பி வரவில்லை என்றால், என்னை நம்ம மரபுப்படி அடக்கம் பண்ணிடுங்க’ என்று சொன்னாங்க. என் கணவரை சீல்டு செய்த சவப்பெட்டியில் புதைத்துள்ளனர். அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்தால், மக்களுக்கு எந்தவித தொற்றும் பரவாது. மாண்புமிகு முதல்வரிடம் பணிவாகக் கேட்கிறேன். என் 2 குழந்தைகளோடு விதவையாக நிற்கிறேன். கண்ணீரோடு முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்க அய்யா” என்று கண்ணீர்மல்க கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்” என்றார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பலியான மருத்துவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்திருக்கிறார்.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...