முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மால்கள் தவிர்த்த கடைகளுக்கு மத்திய அரசு அனுமதி... எந்தெந்தக் கடைகளுக்கு தெரியுமா?

மால்கள் தவிர்த்த கடைகளுக்கு மத்திய அரசு அனுமதி… எந்தெந்தக் கடைகளுக்கு தெரியுமா?

பொது முடக்கம் (General lock down) அமலில் இருக்கும் வேளையில், அனைத்துக் கடைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடைகளுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மாநிலங்களின் கடைகள் மற்றும் விநியோகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கடைகள் , குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தனித்த கடைகள் மற்றும் வணிக வளாகங்களாகவோ அல்லது தொடர் கடைகளாகவோ அல்லாத கடைகளுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து ஏப்ரல் 25ஆம் தேதி முதல் விலக்கு அளிக்கப்படுகிறது.

பெரும் வணிக வளாகங்கள் மற்றும் சிறிய வளாகங்களில் இருக்கும் கடைகள் திறக்கப்படக்கூடாது. (எ.கா: மால்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் கடைகள்). எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை திறக்கப்படலாம். ஆனால், கடையில் வேலை செய்பவர்களில் பாதி பேர் மட்டுமே வேலைக்கு வர வேண்டும்.

அதேபோல, எந்தக் கடைகளும் அருகில் இல்லாத நிலையில், ஒரே ஒரு கடையாக இருந்தால் அந்தக் கடை திறக்கப்படலாம்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையின்படி,

இந்த தளர்வுகள் தரப்பட்டாலும், கடைகள் முழுமையான ஊழியர்கள் எண்ணிக்கையுடன் இயங்கக் கூடாது. 50% ஊழியர்களுடன் இயங்க வேண்டும். சமுக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டியதும் கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேஷன் எல்லைக்குட்பட்ட மற்றும் கார்ப்பரேஷன் எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகளுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...