முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மின் கட்டணம் எவ்வளவு? - நுகர்வோர் அறிய மின்வாரியம் புது யோசனை!!

மின் கட்டணம் எவ்வளவு? – நுகர்வோர் அறிய மின்வாரியம் புது யோசனை!!

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டை அளவிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் மின்அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று அறிவித்திருந்தது.

ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காததன் காரணமாக, மின்வாரியம் தற்போது அறிவித்துள்ளப்படி மின்கட்டணத்தை செலுத்தினால், அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தங்களது பிரிவு அலுவலகத்தின் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோரின் மின்னஞ்சலுக்கோ, வாட்ஸ் அப் எண்ணுக்கோ இந்த புகைப்படத்தை தொழிற்சாலைகளின் நிர்வாகம் அனுப்பலாம்.

அதன் அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் உள்ளிட்ட விவரங்களை . gov.in என்ற இணையதளத்தில் நுகர்வோர் பெறலாம் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...