முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மும்பையில் அப்பா மரணம்: ஊரடங்கால் பெங்களூருவில் சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்

மும்பையில் அப்பா மரணம்: ஊரடங்கால் பெங்களூருவில் சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்

பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் தந்தை சிறுநீரக பிரச்சனையால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 95. ஷூட்டிங்கிற்காக பெங்களூருவுக்கு சென்ற இடத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அவர் பெங்களூருவில் சிக்கிக் கொண்டுள்ளார்.

கொல்கத்தா டெலிபோன்ஸில் வேலை செய்தவர் பசந்த குமார். அவருக்கு மனைவி சாந்திமோயி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த பிள்ளை தான் மிதுன் சக்ரவர்த்தி.

பசந்த குமார் இறந்தபோது மிதுன் சக்ரவர்த்தியை தவிர மற்ற அனைவரும் அவருடன் இருந்துள்ளனர். பசந்த குமார் இறந்த செய்தியை ட்விட்டரில் தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரபல பெங்காளி நடிகை ரிதுபர்னா சென்குப்தா ட்வீட் செய்தார்.

பசந்த குமார் மறைவு செய்தி அறிந்த மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

1976ம் ஆண்டு வெளியான ம்ரிகயா படம் மூலம் நடிகர் ஆனவர் மிதுன் சக்ரவர்த்தி. முதல் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு மிதுன் நடித்த டிஸ்கோ டான்ஸர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அவர் ஜிம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...