முகப்பு சினிமா மூடப்பட்ட பூ மார்க்கெட்டுகள்...1,000 ஏக்கரில் கருகும் பூக்கள்! - விவசாயிகளை இறுக்கும் கடன்

மூடப்பட்ட பூ மார்க்கெட்டுகள்…1,000 ஏக்கரில் கருகும் பூக்கள்! – விவசாயிகளை இறுக்கும் கடன்

“கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், திருச்சியில் பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால், தோகைமலை பகுதியில் மல்லிகை, ரோஜா உட்பட பல வண்ணப் பூக்கள் செடிகளிலிருந்து பறிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

கருகும் மலர்கள்

இதனால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: `ஊரடங்கைப் பயன்படுத்தி விவசாயக் கிணறுல சாயக்கழிவை ஊத்திட்டாங்க!’ – குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சுற்றியுள்ள நங்கவரம், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, சூரியனூர், ஆச்சம்பட்டி, ஆர்.டி மலை மற்றும் கரூர் – திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளில் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, உச்சிப்பூ, சம்மங்கி, சாமந்தி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களை சுமார் 1,000 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்புகளில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு காரணமாக, திருச்சி பூ மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன.

கருகும் மலர்கள்

இதனால், கரூர் மாவட்டத்தில் மேற்சொன்ன இடங்களில் பூ சாகுபடி செய்த விவசாயிகள், விளைந்த பூக்களைப் பறிக்க கூலித் தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். இதனால், பூக்கள் செடிகளில் பூத்துக்குலுங்கி வாடி காய்ந்து உதிர்ந்து போகும் கொடுமை நடக்கிறது. இதனால் திருச்சி மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. மேலும், ஊரடங்கு காரணமாக திருமண நிகழ்ச்சிகள், சுப காரியங்கள், திருவிழாக்கள், கோயில் விழாக்கள் போன்றவற்றுக்கு பூக்கள் சப்ளை செய்யமுடியாமலும், தேவைப்படாமல் இருப்பதாலும், கடந்த 30 நாள்களாக பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, பூ சாகுபடி செய்துள்ள முன்னோடி விவசாயிகளான முதலைப்பட்டி அர்ச்சுணன், சேப்பளாப்பட்டி விஜயலெட்சுமி ஆகியோர் கூறியதாவது,

“இந்தப் பூ செடிகளை பராமரித்து உரம், மருந்துகள் வைத்து மகசூல் பெற ஏக்கருக்கு ரூ.50,000 முதல் 1 லட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்து வந்தோம். பூத்த பூக்களை திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மார்க்கெட் மற்றும் வெளிச்சந்தை மார்க்கெட்களில் விற்பனை செய்து வந்தோம். தற்போது, கொரோனா வைரஸால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கோயில்கள் பூட்டப்பட்டும், மார்க்கெட்டுகள் மூடப்பட்டும் உள்ளது. இதனால், எங்கள் வாழ்கை கேள்விக்குறியாகி உள்ளது.

கருகும் மலர்கள்

மேலும், எங்களை நம்பி பூப்பறிக்கும் 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களும் முடங்கி வீட்டிலேயே உள்ளனர். இதனால், தோட்டங்களிலும், தென்னையில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்த பூக்கள் பூத்து செடிகளில் பறிக்க முடியாமல் காய்ந்துள்ளதால், விற்க முடியாமல் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளோம். மல்லிகைப் பூக்களை வாசனைத் திரவியம் (சென்ட்) எடுக்க சூரியனூர் பகுதியைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் கம்பெனியினர் குறைந்த அளவு பூக்களை மட்டுமே பெற்று, வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால், மல்லிகைப் பூவைத் தவிர, இதரப் பூக்கள் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து விடுகிறது. மேலும், மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த மல்லிகைச் செடிகளை மேலும் பூக்காமல் தடுத்திட வேதனையுடன் வேறு வழியின்றி செடிகளைப் பாதியில் அறுத்து விடுகின்றனர். வருமானம் இல்லாததால், பெற்ற கடன்களை திரும்பச் செலுத்த முடியாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் முடங்கியுள்ளோம். கழுத்தை இறுக்கும் கடனை எப்படி திருப்பிக் கட்டப் போறோம்னு தெரியலை.

கருகும் மலர்கள்

தற்போது தமிழக அரசு வாழை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியதுபோல், மலர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி, திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் மற்ற பூ மார்க்கெட்டுகளை திறந்து செயல்படுத்திட முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும். அதோடு, பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு நிவாரண உதவித் தொகையை உடனடியாக கருணை அடிப்படையில் இந்த அரசு வழங்க வேண்டும். இல்லைன்னா எங்க நிலைமை கொரோனா பாதித்தவர்களைவிட கொடூரமாயிடும்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...