முகப்பு சினிமா `மெர்ஸிலிருந்து கற்ற பாடம்; 20,000 பேருக்குச் சோதனை!’ - கொரோனாவை அடக்கிய தென்கொரியா

`மெர்ஸிலிருந்து கற்ற பாடம்; 20,000 பேருக்குச் சோதனை!’ – கொரோனாவை அடக்கிய தென்கொரியா

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கியதாக் கூறப்படும் கோவிட் -19 வைரஸ் இன்று உலகம் முழுவதும் 19,000 பேரைப் பலி் கொண்டுவிட்டது. இந்த வைரஸைக் கண்டு மொத்த உலகமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். கொரோனா வைரஸால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அங்கு நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் செய்வதறியாது திணறி வருகிறது.

கொரோனா வைரஸ்

ஆனால் வைரஸால் முதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீனாவும், இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட தென்கொரியாவும் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 2-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த நாடு 9-வது இடத்துக்குச் சென்றுள்ளது. தென்கொரியாவின் துரித மற்றும் கடுமையான நடவடிக்கையே அங்கு வைரஸின் பரவல் குறைந்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

Also Read: கொரோனா அச்சத்தில் உலக நாடுகள் – கரம்கொடுக்கும் தனியார் நிறுவனங்கள், உலக பணக்காரர்கள்!

தென்கொரியாவைப் பொறுத்தவரை தற்போது அங்கு 9,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உள்ளது. உலகிலேயே வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு ஒரு நாளுக்கு 20,000 மக்களுக்குக் கொரோனா சோதனை நடத்துகிறது தென்கொரியா. அதேபோல் அங்குதான் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் அமைத்தும் வைரஸ் சோதனை செய்யப்படுகிறது.

தென்கொரியா

2012-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உருவான MERS (Middle East respiratory syndrom) என்ற சுவாசத் தொற்றுநோய் 2015-ம் ஆண்டு தென்கொரியா உட்பட 21 நாடுகளுக்குப் பரவியது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்த நோயால் அதிக மக்களைப் பலி கொடுத்த நாடாக தென்கொரியா இருந்தது. அந்த நோய்க்குப் பிறகு மிகவும் மோசமாக இருந்த தென்கொரியாவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையங்களை மறுபரிசீலனை செய்யவும் இன்னும் மோசமான நோயை எதிர்த்து தயாராவதற்கு ஒரு சிறப்புத் துறையை அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவானது. அந்த நேரத்தில் தென்கொரியாவில் உருவாக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள்தான் தற்போது கொரோனா வைரஸ் பரவலின்போது பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவல்களை நிர்வகித்தல் மற்றும் பகிரங்கமாகப் பகிர்வது தொடர்பான விதிமுறை மெர்ஸுக்குப் பிறகு கணிசமாக மாறியது. அங்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டவுடனேயே வணிக வளாகங்கள், தேவாலயங்கள், இரவு விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களும் உடனடியாக மூடப்பட்டன. கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன.

தென்கொரியா

சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு அதிகமாக கொரோனா சோதனை நடத்தப்படுவதால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பரவல் குறைந்து உயிரிழப்புகளும் தவிக்கப்படுகின்றன. மேலும் கொரோனா வைரஸால் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகமாக உயிரிழக்கிறார்கள் அந்த வகையில் தென்கொரியாவில் வெறும் 18% சதவிகிதம் மட்டுமே முதியவர்கள் உள்ளனர். அதிக முதியவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென் கொரியா 53-வது இடத்தில் உள்ளது இதுவும் வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைய பெரும் காரணமாக உள்ளது.

அனைத்து நாடுகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நிலை தென்கொரியாவில் தலைகீழாக உள்ளது. அங்கு பெரும்பாலான ஆண்களே வைரஸ் தொற்றுக்குள்ளானதால் தனிமைப்படுத்துதல் சிகிச்சை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மிக எளிதாக இருந்துள்ளன. முதலில் அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் தவித்தனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு பெரிய கூடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. ஆம்புலம்ஸ்களும் மருத்துவமனைகளாக மாறின.

தென்கொரியா

தன்னார்வ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகலாக வேலை செய்து பிற நோயாளியின் உயிரைக் காப்பாற்றி வருகின்றனர். தென்கொரியாவில் செய்யப்படும் வைரஸ் சோதனைகளே வைரஸ் கட்டுப்பாட்டுக்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. தற்போது பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா, மருத்துவ உபகரணங்களுக்காக தென்கொரியாவிடம் உதவிகேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...