முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மேலும் 2 மாவட்டங்களுக்கு ஃபுல் லாக்டவுன்... இவைதான் அவை!

மேலும் 2 மாவட்டங்களுக்கு ஃபுல் லாக்டவுன்… இவைதான் அவை!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 6 மணி முதல் 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கிற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி 28 ஆம் தேதி இரவு 9 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று இந்த மாவட்டங்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்விரு மாவட்டங்களிலும் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...