முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் யாழ். மறவன்புலவில் பாரிய இரைச்சலுடன் மினி சூறாவளி: வீடுகள் சேதம் (Photos)

யாழ். மறவன்புலவில் பாரிய இரைச்சலுடன் மினி சூறாவளி: வீடுகள் சேதம் (Photos)

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.

இதனால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மணற்காட்டு கந்தசுவாமி ஆலயம், ஒளி சுட்டான் ஞானவைரவர் ஆலயம், மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை முற்றாக சேதமடைந்துள்ளன.

பாரிய இரைச்சலுடன் 3 நிமிட நேரம் நீடித்த சூறாவளியில் சில வீட்டின் கூரைகள் சேதமடைந்தன. கோழிக் கூண்டுகள், மாட்டுக் கொட்டில் மற்றும் சுற்று மதில்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ். மறவன்புலவில் பாரிய இரைச்சலுடன் மினி சூறாவளி: வீடுகள் சேதம் (Photos) appeared first on jaffnavision.com.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...