முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ரசிகர்களுக்கு விஜய் 5000 ரூ. நிதி உதவி: நெகிழ்ச்சியாக பாராட்டிய சச்சின் இயக்குனர்

ரசிகர்களுக்கு விஜய் 5000 ரூ. நிதி உதவி: நெகிழ்ச்சியாக பாராட்டிய சச்சின் இயக்குனர்

நடிகர் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் இன்று தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ருபாய் அனுப்பி வைத்துள்ளார். charitable trust மூலமாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பணம் கிடைத்த பல ரசிகர்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டரை லட்சம் ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். விஜய்யின் சச்சின் படத்தினை இயக்கிய ஜான் மகேந்திரன் விஜய்க்கு நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார்.

தெறி படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரனின் மகன் தான் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.

“சபாஷ் விஜய்…உயிர் போயி கொண்டிருக்கும் நேரத்திலும் மத, ஜாதி , வடக்கன், தெர்க்கன் என்று வீண் துவேஷங்கள் பலர் செய்து கொண்டிருக்கும் பொழுது, அமைதியாக, உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் நேசக்கரம் நீட்டுவதை பார்க்கும் பொழுது…மனதார இறுக அனைத்து வாழ்த்துகள் விஜய்” என கூறியுள்ளார் அவர்.

ஜான் இயக்கிய சச்சின் படம் விஜய்யின் கெரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி செய்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும் ட்விட்டரில் உருக்கமாக நன்றி கூறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வள்ளல் விஜய் என்கிற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...