முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ராகவா லாரன்ஸின் 'லக்ஷ்மி பாம்' படம் நேரடியாக OTT-யில் ரிலீஸ்?

ராகவா லாரன்ஸின் ‘லக்ஷ்மி பாம்’ படம் நேரடியாக OTT-யில் ரிலீஸ்?

தற்போது நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆவதாக கூறப்படும் நிலையில், அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி வெளியானால் சூர்யா தரப்பு திரைப்படங்கள் இனி எதையும் ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கிவரும் படமும் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆகிறது என தகவல் பரவி வருகிறது.

அந்த படம் மே 22ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நேரடியாக Disney+Hotstarயில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

தமிழில் ஹிட் ஆன முனி 2: காஞ்சனா படத்தினை தான் ஹிந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் . இதில் முதல் முறையாக திருநங்கையாக நடித்துள்ளார். கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார்.

மே 22 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷ்ன் பணிகள் நடைபெறவில்லை. இன்னும் எடிட்டிங் , விஎப்எக்ஸ் உள்ளிட்ட பெரிய அளவிலான பணிகள் முடியாமல் இருக்கிறது. அந்த பணிகள் முடிய ஜூன் மாதம் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் திருநங்கையின் ஆவி புகுந்த நபராக அக்ஷய் நடித்துள்ளார். அவர் சேலை கட்டி நடித்திருந்தது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டிருந்தது.

சேலை கட்டி நடித்தது பற்றி பேசிய அக்ஷய் குமார், “நான் சேலையில் நடிக்க எந்த பிரச்சனையையும் உணரவில்லை. எனக்கு அது சிறப்பாகவே இருந்தது. இது போன்ற வித்யாசமான விஷயங்கள் செய்ய எனக்கு பிடிக்கும். நான் நடித்ததிலேயே மிகவும் கடினமாக கதாபாத்திரம் இதுதான். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி, உடல் மொழி சரியானதாக திரையில் கொண்டு வர அதிகம் கஷ்டப்பட்டேன்” என அவர் கூறியுள்ளார்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...