முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ரூம் போட்டு கள்ள நோட்டு அடிச்ச கில்லாடி கைது!

ரூம் போட்டு கள்ள நோட்டு அடிச்ச கில்லாடி கைது!

கேரள மாநிலம் மாவட்டம் உப்பதரா என்ற பகுதியில் வசித்து வருபவர் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஹெனிப்பெரோஸ். இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்த நிலையில் வேறொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு இடுக்கி மாவட்டம் உப்புதரா என்ற பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் தனது குழந்தையை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக காவலர் துறையினர் ஹெனிப்பெரோஸின் வீட்டிற்கு சென்றனர்.

காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்ததும் ஏராளமான ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

காவலர் ஒருவர் சிதறி கிடந்த ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப்பார்த்துள்ளார். அது கள்ள ரூபாய் நோட்டாக இருந்ததால் சிதறி கிடந்த அனைத்து ரூபாய் நோட்டுகளையும் ஆய்வு செய்த போது அத்தனையும் கள்ள நோட்டுகள் தான் என்பதை உறுதி செய்த காவலர் உயர்காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மேலும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் ஹெனிப்பெரோஸ் தங்கியிருந்த அறைக்குள் சென்று சோதனை செய்ததில் கட்டிலுக்கு கீழும் பீரோவிலும் அச்சடிக்கப்பட்ட ஒரு சில கள்ளநோட்டுகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தோடு அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் தேக்கடி மற்றும் வாகமன் போன்ற இடங்களில் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்ததாக வாக்குமுலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் அவர் தங்கியிருந்ததாக கூறிய ஹோட்டல் அறைகளுக்கு சென்று காவல்துறையினர் சோதனை செய்ததில் 12 லட்சத்து 42ஆயிரத்து 200 ரூபாய் கள்ள நோட்டுகளையும்,
கள்ள நோட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்திய பிரிண்டர் போன்றவற்றையும் பறிமுதல் செய்ததனர்.

அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்களை எங்கெல்லாம் விற்பனை செய்துள்ளார். இவரோடு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உதவி காவல் ஆய்வாளர் என்.சி.ராஜ்மோகன் கூறியுள்ளார்.

குழந்தையை அடித்ததாக விசாரிக்க சென்ற காவல்துறையினரால் 12.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...