முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் "ரேபிட் டெஸ்ட் சரியில்லை" ஒருவழியா இந்தியாவும் கண்டுபிடிச்சிருச்சு!

“ரேபிட் டெஸ்ட் சரியில்லை” ஒருவழியா இந்தியாவும் கண்டுபிடிச்சிருச்சு!

கொரோனாவுக்கான மருந்தைப்போலச் செய்தி சேணல்களின் தலைப்பு செய்தியாக வலம் வந்த ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் சோதனை முடிவுகள் தவறாக உள்ளது என்பதால் அதைப் பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறபித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வெளிவர 24 மணி தேவைப்பட்டது. குறிப்பாக இந்த காலதாமத்தால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலே சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.

இதனால் சோதனைகளைத் துரிதப்படுத்தவும், சோதனை முடிவுகளின் நேரத்தைப் பெருமளவு குறைக்கும் நோக்கிலும் சீனா, கொரியா நாடுகளிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் லட்சக்கணக்கில் இந்தியா இறக்குமதி செய்தது.

ராஜஸ்தான், தமிழ்நாடு மாநிலங்களுக்கு தலா 2 லட்சத்திற்கும் அதிகமான ரேபிட் டெஸ்ட் கருவிகள் பரிசோதனைகள் தீவிரப்படுத்த வழங்கப்பட்டது. சோதனைகள் தொடங்கி ரேபிட் டெஸ்ட் மூலம் கொரோனா இல்லை எனப் பலர் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். அதே வேளையில், கொரோனா தொற்று இருப்பதாகக் கூறி சிலர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத் துறை ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் அவை தவறான முடிவுகளை அளிக்கிறது எனத் தனது மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது. அதன்படி காலை முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ட்விட்டரில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள் குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது. அதன்படி “அடுத்த 2 நாளுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்-களை பயன்படுத்தி வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளக் கூடாது. ரேபிட் டெஸ்ட் கருவிகள் தரும் பரிசோதனை முடிவுகளில் வேறுபாடுகள் உள்ளன. அடுத்த 2 நாளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சரியான முடிவுகளைத் தருவதில்லை என்பதால் ஸ்பேயின், ஃப்ரேன்ஸ் நாடுகள் உள்பட பல நாடுகள் அதை திருப்பி அனுப்பி வந்தது. கடந்த 2 வாரங்களாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் இதை முக்கியச் செய்தியாக வெளியிட்டு வந்தன. இதை கண்டுக்கொள்ளாமல் இந்தியா, அந்த கருவிகளைச் சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வாங்கியுள்ளது. இப்போது மேலே குறிப்பிட்ட நாடுகள் கூறிய லட்சக்கணக்கில் ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பெற்ற பின் இந்தியாவும் கூறத் தொடங்கியுள்ளது.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...