முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் லாக்டவுன் 25 நாளில் 18 முறை ஒளிபரப்பிவிட்டார்கள்.. மோகன்ராஜா நெகிழ்ச்சியான ட்வீட்

லாக்டவுன் 25 நாளில் 18 முறை ஒளிபரப்பிவிட்டார்கள்.. மோகன்ராஜா நெகிழ்ச்சியான ட்வீட்

இயக்குனர் மோகன்ராஜா இயக்கிய படங்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் தற்போதும் ரசித்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர்.

தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் மற்றும் டிவி தான்.

அப்படி இந்த சமயத்தில் தான் இயக்கிய படங்கள் 18 முறை ஒளிபரப்பாகியுள்ளது பற்றி நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தனது மகள் இதை தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“சில நிமிடங்கள் முன் என் மகள் என்னிடம் ‘அப்பா இப்போது KTvல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தனி ஒருவனையும் சேர்த்து நீங்க இயக்கிய 8 படங்கள் (ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன்) மற்றும் சித்தப்பா நடித்த நிமிர்ந்து நில், பூலோகம், அடங்க மறு, வனமகன், கோமாளி என்கிற படங்கள் கடந்த lockdown 25 நாட்களில் 18 முறைக்கும் மேல் ஒளிபரப்பிவிட்டார்கள்’ என்று தான் குறித்து வைத்ததை காண்பித்து உற்சாகம் பகிர்ந்தாள்.

“இந்த lockdown என்கிற கடின நாட்களில், எடுத்த படங்கள் மூலம் உங்கள் குடும்பங்களை தொடர்பு கொள்ள முடிந்ததை நினைக்கும் அதே நேரத்தில், சினிமாவில் அளவற்ற ஆசையோடு உலகத்தையே உலுக்கிவிடவேண்டும் என்று நான் ஆகாயத்தில் கோட்டை கட்டிய பக்குவமற்ற வயதில், குறு என்கிற அதிகாரத்தோடு என் தந்தை என் தலை மீது குட்டு வைத்து “Audience தான் நம்ம கடவுள். அவங்கள திருப்தி பண்ற படங்களை மட்டுமே எடு” என்கிற மந்திரத்தை தலையில் அன்றே ஏற்றியதே நினைவுக்கு வருகிறது. இந்த நொடியிலும் மாடியில் தன் மகன்கள் எடுத்த படத்தை பூரிப்போடு பார்த்து கண்டிருக்கும் தந்தைக்கு என்றும் போல் இன்றும் நன்றியுணர்வோடு நான்.”

“படங்கள் பங்கேற்ற அத்தனை பேருக்கும் மற்றும் ஒளிபரப்பும் அத்தனை ஊடங்களுக்கும் நன்றி” என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவருடன் பயணித்தது பற்றி பேசியுள்ள “உங்களுடன் பயணித்தது ஒரு அற்புதமான பயணம். எனக்கு கிடைத்த வரம் அது” என கூறியுள்ளார்.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...