முகப்பு சினிமா லாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்? #Analysis

லாக் டௌனுக்குப் பிறகு எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்பு ஏற்படும்? #Analysis

கடல் தாண்டும் பறவைகளாக இருந்தவர்கள் எல்லாம் வீட்டுக்குள் அடைபட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவில் இருந்து தப்பித்தாலும், இப்போது பலரது அச்சம் வேலையிழப்பும், சம்பளம் குறைப்பும்தான். அப்படியெல்லாம் சம்பளம் குறைக்கப்படாது, நீங்கள் உங்கள் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் வரிகளோடு இந்தக் கட்டுரையை எழுத ஆசைதான். ஆனால், இதை வாசிக்கும்போதே பலரின் சம்பளமும் இன்கிரீமென்ட்டும் குறைக்கப்பட்ட செய்தி வந்திருக்கும். இந்தச் சூழல் எப்போது மாறும், நடைமுறை என்ன, பணி பாதுகாப்பு விஷயத்தில் யாருக்கு எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பதை எடுத்துக்கூற முயன்றுள்ளோம்.

IT services

சம்பளம்

பல தொழிலாளர்கள், தங்களது நிறுவனத்தில் பெரிய செலவு என்பது சம்பளம் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஆட்டோமொபைல், தோல் தொழிற்சாலை, நெசவு, விவசாயம் போன்ற உற்பத்தித் துறையில், மொத்த செலவுகளில் சம்பளம் என்பது அதிகபட்சம் 8 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும். சிறிய கார்மென்ட் போன்ற நிறுவனங்களுக்கு 3 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கும். மூலப் பொருள்கள், உற்பத்தி செலவு, ஆடிட்டிங், யார் யாருக்கெல்லாம், கடன், வரி, இதர செலவுகள் ஆகியவை உற்பத்தித் துறையில் சம்பளத்தைவிடப் பெரிது.

Also Read: வேலை இழப்பு… தப்பிக்கும் வழிகள்! – கொரோனாகால ஆலோசனைகள்..!

மனிதவளத்தை மையமாக வைத்து இயங்கும் IT, ஊடகம், வங்கிகள், கல்வி நிலையங்கள், சினிமா, ஹோட்டல் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், இங்கே சம்பளம் என்பது பெரிய தொகை. இது, நிறுவனத்தின் மொத்த செலவுகளில் 20 முதல் 40 சதவிகிதம் வரை இருக்கும்.

தொழிலாளர்களின் சம்பளம் ஒரு நிறுவனத்தில் பாதி செலவைக்கூட தொடாமல் இருக்கும்போது, கடினமான சூழலில் சம்பளம் குறைக்கப்படுவது எதனால் என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கும். அதற்குத் தெளிவான விடை தருகிறார், நிர்வாக ஆலோசகர் டாக்டர் ஆர். கார்த்திகேயன்.

“உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை சம்பளம் குறைவுதான் என்றாலும் அங்கே வேலை இழப்பு என்பது பெரிதாக இருக்காது. தேவை வரும்போது உற்பத்தியை உடனே தொடங்கவேண்டிய கட்டாயம் வரும் என்பதால், சம்பளத் தொகை சிறியதாக இருந்தாலும் வேலையை விட்டு யாரையும் நிறுத்த மாட்டார்கள். உற்பத்தி நிறுவனங்கள் ஒரு பகுதியினரை எப்போதும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்திருப்பார்கள். பணி இல்லாத சூழலில், கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குறைத்துக்கொள்வார்களே தவிர, நிரந்தர தொழிலாளர்களின் வேலைக்கு பாதிப்பு இருக்காது.

சர்வீஸ் துறையைப் பொறுத்தவரை எல்லாமே புராஜெக்ட் என்று மாறிவிட்டது. கிளையன்ட்ஸ் ஒரு புராஜெக்ட் கேட்கிறார்கள் என்றால், அதில் 50 சதவிகிதம் வரை அந்த புராஜெக்ட்டில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே செலவுசெய்வார்கள். ஆனால், புராஜெக்ட் இல்லையென்று வரும்போது, யாருக்கும் எதுவும் கிடைக்காது என்ற நிலைதான். இங்கே முதலாளி, தொழிலாளி என இரண்டு தரப்புக்கும் லாபத்தின் விகிதம் அதிகம் என்றாலும், இங்கே லாபத்துக்காக ஒருவரையொருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதால், ஒரு தூண் சரியும்போது இன்னொரு பக்கமும் சரியும். 

டாக்டர் ஆர் கார்த்திகேயன்

கீழ் நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் குறைத்துக்கொள்வதும், மேல்நிலைத் தொழிலாளர்களிடம் பேசி, அவர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியைக் குறைப்பதும் இக்கட்டான சூழலில் நடைபெறுவதுதான். பெரிய நிறுவனங்கள் இதில் பாதிக்கப்படாது. ஷேர் வேல்யூ வீழ்வது, வேல்யூவேஷன் இறக்கம் போன்றவற்றோடு நின்றுவிடும். அதை அவர்களால் சுலபமாகச் சமாளித்துவிடமுடியும். சோற்றுக்கு யாரும் கஷ்டப்படத் தேவையில்லை.

முக்கியமாக, கொரோனா விஷயத்தில் உள்ளூர் முதல் உலகளவு வரை பாதிப்புகள் இருப்பதால், இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது இன்னும் கணிக்க முடியாமலே உள்ளது. எல்லோருக்கும் பாதிப்பு என்றாலும் அடித்தட்டு மக்களின் பாதிப்புதான் இங்கே பெரியது” என்கிறார்.

Contigency planning

உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஃபோர்டு, டொயோட்டா போன்ற பெரிய நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், வெவ்வேறு நாடுகளில் ஏற்பட்ட போர், கொள்ளைநோய், பூகம்பம், பஞ்சம், சுனாமி என அனைத்தையும் இந்த நிறுவனங்கள் பார்த்திருக்கும். இவர்கள் ஒரு நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்துப் பல நாடுகளுக்கு கன்டிஜன்சி பிளான் என்ற அவசர கால திட்டத்தை வடிவமைத்திருப்பார்கள். உதாரணமாக, ஃபோர்டு நிறுவனத்தில் CFO, CEO, CTO போன்ற முடிவெடுக்கும் பொறுப்பில் ஒரே நிலையில் இருக்கும் யாரும் ஒரே கார் அல்லது ஒரே விமானத்தில் பயணிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு திட்டமிட்டிருப்பார்கள்.

உலகின் பெரிய நான்கு ஆடிட்டிங் நிறுவனங்களில் ஒன்றான KPMG கொடுத்திருக்கும் தகவலின்படி, இந்திய சுற்றுலாத் துறையில் 70 சதவிகிதம் பேரின் வேலை ஆபத்தில் இருக்கிறது. தோராயமாக 3.8 கோடி நபர்கள்.

விளையாட்டு, கேளிக்கை, ஹோட்டல், விடுதிகள், பயணம் மற்றும் சுற்றுலாத்துறை, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் பாதிப்புகள் அதிகம். டெக்ஸ்டைல், இ-காமர்ஸ் துறையில் வளர்ச்சி இல்லை என்ற நிலைதான்.

IT

இந்தியாவின் சேவைத் துறையில் பெரிய பங்காற்றும் ஐ.டி ஊழியர்கள், இந்த கொரோனாவால் எப்படிப் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.டி தொழிலாளர்கள் அமைப்பு (FITE) தலைவர் பரிமளாவிடம் விசாரித்தோம்.

பரிமளா (FITE)

“இந்திய ஐ.டி துறை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சார்ந்து இருக்கிறது. இந்த இரண்டிலுமே பொருளாதாரம் மோசமாக அடிபட்டிருப்பதால், இந்த நாடுகளின் உற்பத்தித்துறை மீண்டு வந்த பிறகுதான் எல்லாமே பழைய நிலைக்குத் திரும்பும். இதற்கு, கிட்டத்தட்ட ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம். 

TCS

உலகம் முழுக்க இருக்கும் பிரச்னை என்பதால், ஒரு இடத்தில் வேலை இழந்தால் மீண்டும் அவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். அதனால் இதுபோன்ற ஒரு சூழலில் தொழிலாளர்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தக்கூடாது. கர்நாடகா யாரையும் லேஆஃப் செய்யக்கூடாது என்று ஏற்கெனவே ஐ.டி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்குப் பதிலாக சம்பளத்தை வேண்டுமானால் குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறது. தமிழகம் உட்பட மற்ற எந்த மாநிலமும் இதுபோல பரிந்துரை எதுவும் செய்யவில்லை.

ஐ.டி நிறுவனங்களும் சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். TCS, “நாங்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்த மாட்டோம். இதுவரை ஆஃபர் லெட்டர் கொடுத்தவர்களையும்கூட வேலைக்கு எடுத்துக்கொள்வோம். ஆனால், யாருக்கும் சம்பள உயர்வு கிடையாது என்று கூறியுள்ளது. விப்ரோ, நாங்கள் வேலையை விட்டு நீக்குவது முதற்கொண்டு எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். கேப்ஜெமினி இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் புரமோஷன், சம்பளம் என எல்லாவற்றையும் வழக்கம்போல தொடருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். 

FITE

Also Read: ‘ஐடி ஊழியர்கள் யாரையும் நீக்கப்போவதில்லை, ஆனால்…’ – டிசிஎஸ் நிர்வாகம் அதிரடி!

இதுபோன்ற ஒரு சூழலில் சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள் என்றால்கூட பரவாயில்லை. ஆனால், யாருக்கும் வேலை இழப்பு ஏற்படக்கூடாது. அடிப்படை சம்பளம் என்பது நிச்சயமாகக் கிடைக்க வேண்டும். மிகவும் கீழ் நிலைத் தொழிலாளர்களாக இருப்பவர்களுக்கு, உணவுக்குத் தேவையான ரேஷன் பொருள்களைக் கொடுக்க வேண்டும். இதில், மாநில அரசுகள் கண்டிப்பாக இருந்தால், இந்த காலகட்டத்திலிருந்து மீண்டு வரமுடியும். எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வருடம்கூட ஆகலாம்” என்கிறார் பரிமளா.

இந்தியாவில் இருக்கும் 13.6 கோடி கான்ட்ராக்ட் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை, தற்போது ஆபத்தில் இருக்கிறது என்கிறது KPMG நிறுவனத்தின் தரவுகள்.

சிறு-குறு தொழில்கள்

தற்போது பெரிய பாதிப்பு என்பது, 5 கோடி ரூபாய்க்குக் கீழ் வணிகம் செய்யும் சிறு மற்றும் குறு தொழில்களுக்குத்தான். இந்தியாவில் பெரிய நிறுவனங்களைவிட SME செக்டார் அதிகமாக இருப்பதால், இவர்கள் தற்போது சம்பளக் குறைப்பு தவிர வேறு வழியில்லாமல் நிற்கிறார்கள். மத்திய அரசும் இதுவரை SME செக்டாருக்கு நேரடியாக எந்தச் சலுகையும் அறிவிக்கவில்லை என்பதால், தற்போது வேலை இழப்பு மட்டுமில்லை; தொழிலே பாதிக்கும் நிலையில் இருக்கிறது.

இதுவரை ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால், தயாரிப்பை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி மட்டுமே யோசித்திருப்போம். ஆனால், இந்தச் சூழ்நிலையில் பிசினஸ் மாடலை மாற்றி யோசிக்க வேண்டியது கட்டாயம்.

SME செக்டார்கள் மீண்டு வரவேண்டும் என்றால், கொஞ்சம் மாற்று சிந்தனை தேவை என்கிறார், டாக்டர் ஆர். கார்த்திகேயன்.

“இதுவரை தொழிலை மாற்றுவதற்கு யோசித்து, இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி விட்டிருப்போம். இப்போது நேரம் இருக்கிறது. எல்லாவற்றையும் மீண்டும் மறு ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். லாக்டெளன் முடிந்த பிறகு, நம் தொழில் சீக்கிரம் நிலைபெற நிறுவனங்கள் தங்களை சுய ஆய்வு செய்துகொண்டு, பிசினஸ் மாடலை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். அதைப் பற்றி ஆலோசனை நடத்துவது போன்ற விஷயங்களைத் தீவிரமாகச் செய்ய வேண்டும். இதுவரை நம் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை எடுத்துப் பார்த்து, இனி வளர்ச்சி எப்படி இருக்கப்போகிறது, எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். கவலைப்படுவதில் பிரயோஜனம் இல்லை” என்று அறிவுரை கூறுகிறார்.

ஜவுளித் துறைக்கு அரசு எந்த ஊக்கமும் கொடுக்கவில்லை என்றால், ஒரு கோடி நபர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

Representational Image

பெண்கள்

“ஃபிரஞ்சுப் புரட்சி, உலகப்போர், ரஷ்ய புரட்சி, உலகப் பொருளாதார சரிவு என்று இக்கட்டான பல சூழல்களில்,  பெண் தொழிலாளர்கள் எல்லாவற்றையும் சகஜ நிலைக்கு மாற்றுவதில் தீவிரமாக உழைத்துள்ளார்கள். ஆனால், இவர்களுக்குக் கிடைத்தது என்னவோ கடைசியில் துரோகமும் வஞ்சமும்தான். இரண்டாம் உலகப்போரின்போது, ஒவ்வொரு ஊரிலும் பெண் தொழிலாளர்கள் சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள். போர் முடிந்தபிறகு, அவர்கள் அத்தனை பேரையும் அந்த நிறுவனங்கள் வேலையை விட்டு நிறுத்தியது. கொரோனா சூழல் இதற்கு சளைத்ததில்லை. இப்போதும்கூட ஆட்குறைப்பு என்ற சூழல் உருவாகும்போது, முதலில் வேலையை விட்டு நிறுத்தப்படுவது பெண்கள்தான்.

வேலை இழப்பு

இது புதிய விஷயமில்லை. ஏற்கெனவே இதுபோல பல முறை நடந்திருக்கிறது” என்கிறார் பரிமளா. மேலும் அவர், “நிறைய பேரை வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றால், முதலில் பெண்களைத்தான் டார்கெட் செய்வார்கள். அதிலும், திருமணமான, குழந்தை இருக்கிற, கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை முதலில் குறிவைப்பார்கள். நம் சமூகத்தில் பெண்களின் வருமானம் என்பது இரண்டாம் பட்சமாக பார்க்கப்படுவதால் இந்த நிலை. ஐ.டி துறையில் மற்றவர்களைப் போல குழந்தை இருக்கும் பெண்களையும், கர்ப்பிணிப் பெண்களையும் பிழிந்து வேலைவாங்க முடியாது. அவர்களின் வேலையை சரியாகச் செய்தாலும் இவர்களுக்கு குடும்ப பொறுப்புகளும் இருக்கும் என்பதால், இவர்களை வேலையை விட்டு நீக்க முடிவெடுப்பார்கள்.” என்கிறார்.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...