முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக் பாஸ் வந்த போது தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் ஆர்மி துவங்கும் அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஓவியா ஆர்மிக்கு பிறகு லொஸ்லியாவுக்கு தான் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். அவர் அறிமுகம் ஆகும் படம் . இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். அதை எதிர்பார்த்து காத்திருப்பதாக லொஸ்லியா ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இந்த படத்தினை இயக்கி உள்ளனர். பிரென்ட்ஷிப் படம் முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கியுள்ளனர். நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

ஹர்பஜன் சிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார். படத்தின் தலைப்பை வைத்தே கணித்து இருக்கலாம்.. நம்
ஊரில் வந்து கல்லூரியில் படிக்கும் ஹீரோவுக்கு கிடைக்கும் நட்பு பற்றியது தான் முழு படமும். அந்த நண்பர்கள் கேங்கில் ஒருவராக தான் லொஸ்லியாவும் நடித்து உள்ளார்.

ஹர்பஜன் சிங்கிற்கு இது இரண்டாவது தமிழ் படம். அவர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். சந்தானம் அந்த படத்தில் மூன்று ரோல்களில் நடித்து உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூன்று வெளிவந்து இருந்தது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கின் அடுத்த படமான பிரென்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவரவுள்ளது. அதை பார்க்க நாளை மாலை 4 மணி வரை காத்திருங்கள்.

இது ஒருபுறம் இருக்க, லொஸ்லியாவின் இளமை பருவ புகைபடங்களை சிலவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. அந்த புகைப்படங்களில் லொஸ்லியா பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்திருந்தார். அப்போது அவர் அதிகம் ஒல்லியாக இருப்பது போல தெரிகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...