முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்!

வடகொரிய தலைவர் சகோதரி கிம் யோவின் தலைமையில் இயங்கும் அறை எண் 39-ன் மர்மம்!

வடகொரியாவின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், கிம் ஜாங் வஉன் மேற்கொள்ளும் ஆயுத சோதனைகளுக்கு நிதி திரட்டவும் பயன்படுத்தப்படும் அமைப்பு தான் அறை எண் 39. இந்த அமைப்பின் முழு பொறுப்பும் கிம் ஜாங் சகோதரி கிம் யோ மற்றும் அவரது கணவருக்கு மட்டுமே என கூறப்படுகிறது.

அறை எண் 39 என அறியப்படும் இந்த அமைப்பு, 1970 முதல் செயற்பாட்டில் இருக்கும் இந்த அறை எண் 39, உலக நாடுகளின் பொருளாதார தடைகளில் இருந்து வடகொரியாவை மீட்கவே உருவாக்கப்பட்டதாகும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் போலியான பொருட்களை களமிறக்குவதையே பணியாக செய்து வருகிறது.அதன் மூலம் ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 1.6 பில்லியன் பவுண்டுகள் வரை வருவாய்
ஈட்டுகின்றனர்.போதை மருந்து, போலி கரன்சிகள் தயாரிப்பது, தங்கம் கடத்துவது உள்ளிட்ட பணிகளில் இந்த அறை எண் 39 அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

சாத்தியமான எந்த வகையிலும் பணத்தை திரட்டுவதற்கான ஒரே நோக்கத்துடன் இந்த அறை எண் 39 அமைப்பு செயல்பட்டு வருகிறது.தங்கம் கடத்துதல், போலி வயாக்ரா மற்றும் பெரிய அளவிலான மெத் மற்றும் ஹெராயின் உற்பத்தி ஆகியவை இந்த அமைப்பால் நடத்தப்படும் பல சட்டவிரோத முறைகளில் அடங்கும்.

சுமார் 4 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு உரிமையாளரான கிம் ஜாங் உன், சொந்தமாக தீவு ஒன்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.சொகுசு ரயிலை மட்டுமே நம்பியுள்ள கிம் ஜாங் உன், தமது மாளிகைக்கு அடியில் தனிப்பட்ட ரயில் நிலையம் ஒன்றையும் அமைத்துள்ளார்.

ஆடம்பர கப்பல் ஒன்றும் கிம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி கிம் ஜாங் கார் உள்ளிட்ட வாகனங்களை பொதுவாக பயன்படுத்துவதில்லை என்றாலும், விலையுயர்ந்த கார்களின் வரிசை ஒன்றும் கிம் ஜாங் பராமரித்து வருகிறார்.

நாட்டின் 60 சதவீத மக்கள் ஏழ்மையில் வாழ்ந்து வந்தாலும், கிம் ஜாங் குடும்பத்தினரும் அவரை சுற்றியுள்ள அதிகார வர்க்கமும் மட்டும் செல்வ செழிப்புடன் காணப்படுகிறது.

அறை எண் 39 வழியாக உலகின் ஆனைத்து வசதிகளையும் கிம் ஜாங் உன் அனுபவிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

வடகொரியாவில் தயாராகும் போதை மருந்துக்கு ஜப்பான், சீனா மற்றும் பிற ஆசியா நாடுகளில் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.2003 ஆம் ஆண்டு சுமார் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதை மருந்து குவியலை வடகொரிய கப்பலில் இருந்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றினர்.2005 ல் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், வடகொரியாவில் இருந்து தயாரான போலி வயாக்ரா மாத்திரைகள் மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும்

ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் இருந்ததாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.வடகொரியாவில் இருந்து தயாராகும் போலி 100 டாலர் நோட்டுகளை இதுவரை எவரும் கண்டுபிடித்ததில்லை என கூறப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் வடகொரியாவின் போலி 100 டாலர் நோட்டுகள் சுமார் 82 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு புழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் பெற்றுத் தந்துள்ளது.இந்த மாத துவக்கத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, பிரான்ஸ், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் புழக்கத்தில் விடப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை என கண்டறியப்பட்டு உள்ளன.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...