முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் வடக்கில் வழமைக்கு திரும்பிய தபால் சேவைகள்

வடக்கில் வழமைக்கு திரும்பிய தபால் சேவைகள்

இலங்கையின் வடமாகாணத்தில் தபால் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளதாக வட மாகாண பிரதித் தபால் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்தார்.

அவர் முக்கியமாக தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் தபால் சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. வட மாகாணத்தில் அனைத்து தபாலகங்களிலும் தேங்கிக் கிடக்கும் தபால் தரம் பிரிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் கொழும்பில் இருந்தும் தபால் பொதிகள் இன்றையதினம் வடமாகாணத்திற்கு எடுத்து வரப்படுகின்றன.

தபால் ரயில்களின் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு சேவையினை வழங்கும் முகமாக தபால் திணைக்களத்தின் வாகனங்கள் மூலம் தபால்கள் வட மாகாணத்துக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவை நாளை முதல் எமது பிரதேசத்தில் தரம் பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு மேலதிகமாக தபால் திணைக்களத்தினால் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மருந்து பொதிகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க நடவடிக்கையினையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.

அதேபோல் அலைபேசி இணைப்பு அட்டைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கும் நடவடிக்கையினையும் வடமாகாண தபால் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது- என்றார்.

The post வடக்கில் வழமைக்கு திரும்பிய தபால் சேவைகள் appeared first on jaffnavision.com.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...