முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் வந்திருச்சி கொரோனா ஆட்டோ; மாஸ்க் போடலன்னா ஃபைன் கேட்கும்!

வந்திருச்சி கொரோனா ஆட்டோ; மாஸ்க் போடலன்னா ஃபைன் கேட்கும்!

சென்னை: அணிந்து செல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அட்டோ சென்னையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவ்வாறு வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொது இடங்களில் சரீர விலகலை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பன போன்ற பல்வேறு அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுமக்களில் சிலர் அரசின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பெருநகர மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1987 பிரிவு 2இன் கீழ் மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும், முகக்கவசம் அணியாமல் வாகனங்கள் ஒட்டி சென்றால் வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், முகக்கவசம் அணிந்து செல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் அட்டோ சென்னையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் அறுமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஆட்டோ கொரோனா வைரஸ் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவானது முகக்கவசம் போடாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கும். அதற்கு பதிலாக அந்த ஆட்டோ, 4 முகக்கவசங்களை அன்பளிப்பாக தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...