முகப்பு சினிமா வாழைப்பழம் சாப்பிடச் சொன்னா ஏன் சிரிக்கிறீங்க? - மருத்துவர் சொல்லும் முக்கியத் தகவல் #MyVikatan

வாழைப்பழம் சாப்பிடச் சொன்னா ஏன் சிரிக்கிறீங்க? – மருத்துவர் சொல்லும் முக்கியத் தகவல் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நண்பன் ஒருவனுடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். போகும் வழியில் வாழைப்பழங்கள் விற்கும் ஒரு தள்ளுவண்டிக் கடை இருந்தது. வியாபாரம் முடிந்து கிளம்ப ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தார் அந்தப் பழ வியாபாரி. ஒரு பழம் 6 ரூபாய் என்றார். இரண்டு பழங்கள் 10 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கிவிட்டு, அதில் ஒன்றை நண்பனிடம் நீட்டினேன். ஏளனமாகச் சிரித்த அவன், ‘எனக்கு constipation’ இல்லடா என்றான். அவன் மட்டுமல்ல, நம்மில் பலரும் வாழைப்பழம் என்றவுடன் மலச்சிக்கல் தீர்க்கும் ஒரு மருந்தாகவே பார்க்கின்றோம்.

Representational Image

ஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சி. அதில் நடிகர் ஒருவர், ‘நேத்துதான் கரகாட்டக்காரன் படத்துல ரூபாய்க்கு ரெண்டு பழம் கொடுத்தாங்க’ என்பார். அதற்கு இன்னொரு நடிகர், ‘ஏன் இத்தனை வருஷம் கோமாவுல இருந்தாயா?’ என்பார். உண்மையில் கோமாவில்தான் இருந்தோமா என நினைக்கத் தோன்றுகிறது. 30 ஆண்டுகளில் அதன் விலை 10 மடங்குகளாக அதிகரித்துள்ளது. ஆனாலும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரையும் கவரும் உணவாக அது இருக்கின்றது.

என்னிடம் வயிற்றுப்புண் கோளாறு உள்ள ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார். உணவு முறையில் சில மாற்றங்கள் அவசியம் என ஆலோசனை வழங்கினேன். அதில் ஒரு பகுதியாக வாழைப்பழம் தினமும் ஒன்று உட்கொள்ளுங்கள் என்றேன். அவருடன் வந்த ஒரு 10 வயதுச் சிறுவன் காரணம் இன்றி சிரித்தான். ‘வாழைப்பழத்தை போய் யாராவது சாப்பிடுவாங்களா அங்கிள் ?’ என்றான்.

இன்றைய இளம்தலைமுறை வாழைப்பழத்தை இப்படித்தான் புரிந்து வைத்துள்ளது. வாழைப்பழத்தை சாப்பிட வெட்கப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழைப்பழம் என்பது வயதானோர் மட்டும் சாப்பிடும் ஒரு மருந்து, அவ்வளவே. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. சில பெற்றோர்களுக்கே அதைப் பற்றிய நன்மைகள் எதுவும் தெரிவதில்லை.அதைப் பற்றி பார்பதற்கு முன்னர் வாழைப்பழத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

Representational Image

வாழைப்பழத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியில் (Papuva New Guinea) தான் வாழைப்பழம் முதன்முதலாகத் தோன்றியது என அகழ்வாராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, கி.மு.5000-ல். ஆனால் இதை மறுக்கும் சிலர், இந்தியாதான் அதன் பூர்வீகம் என்கிறார்கள். கி.பி.327-ல் அலெக்ஸாண்டரின் படைகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது வாழைப்பழ சுவையில் மயங்கிய அவர்கள், ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் எகிப்து இரான், இராக், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகள் முழுவதிலும் வாழைப்பழம் பரவியுள்ளது. அங்கிருந்து ஆப்பிரிக்காவில் பரவிய வாழைப்பழம் சில போர்ச்சுகல் வியாபாரிகள் மூலமாக அமெரிக்காவில் பரவியது. இப்படித்தான் உலகம் முழுவதும் வாழைப்பழம் பரவியுள்ளது.

இன்று வாழைப்பழம் அதிகம் உண்ணும் நாடாக அமெரிக்கா உள்ளது. ஆனால், அங்கு விளைச்சல் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாழைப்பழத்தையே அவர்கள் உண்கின்றனர். வாழைப்பழ ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நம் ஊரில் 30-க்கும் மேற்பட்ட வாழைப்பழ ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

Representational Image

நாகர்கோயில் மட்டிப்பழம், திருச்சி மோரிஸ், திருநெல்வேலி மொந்தன் பழம், கொடைக்கானல் மலைவாழை, ஈரோடு தேன் வாழை, கிருஷ்ணகிரி ஏலக்கி என ஊருக்கு ஒரு வகை பிரபலமானது.

முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தை நம்மூரில் பூஜைகளுக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தி அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழைமரங்கள் நடப்படுகின்றன. வாழைப்பழம் மட்டுமல்லாமல் வாழை மரத்தில் அனைத்துப் பாகங்களும் வெவ்வேறு வகையில் உதவுகின்றன.

‘இவனுக்கு உடல் எடை கூடவே இல்லை சார். ஏதாவது சத்து டானிக்’ கொடுங்க சார் என்று தன் பிள்ளைகளுக்கு கேட்டு பலர் என்னிடம் அடம்பிடிப்பார்கள். Appetite stimulants மருந்துகள் எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும், அதன் antihistamine propertyஆல் தூங்கி வழிகின்றனர். இதற்குத் தீர்வாக சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வாழைப்பழத்தையே உண்ணச் சொல்கிறார். தினமும் ஒரு நேந்திரம் பழம் உட்கொண்டால் ஒல்லிகுச்சியாக இருக்கும் உடல், பருமன் ஆகும் என்கிறார்.

மேலும் மட்டிப்பழம் குடற்புழுவை நீக்கும் என்றும், செவ்வாழை குதிக்கால் வலியைப் போக்கும் என்றும் வாழைப்பழத்தின் அனைத்து மருத்துவ நலன்களைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்.

Representational Image

வாழைப்பழத்தில் 60 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவாக உள்ளது. கார்போஹைட்ரேட் சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பொடாசியம், சோடியம், பாஸ்பரஸ் என எல்லா அடிப்படை சத்துக்களும் வாழைப்பழத்தில் உண்டு. சுக்ரோஸ், பஃரக்டோஸ், குளுக்கோஸ் எனச் சர்க்கரைச் சத்துக்களும் இதில் உள்ளதால் ‘வாழைப்பழ சோம்பேரி’ கூட இதை உண்டால் உற்சாகமாகிவிடுகிறான். இரும்புச் சத்து இதில் நிறைந்துள்ளதால், தினமும் ஒரு வாழைப்பழம் உண்டால் கர்ப்பிணிப் பெண்கள் அனிமியா போன்ற இரும்புச்சத்து குறைபாடு கொண்ட நோய்களைத் தடுக்கலாம்.

ஒருமுறை கர்ப்பிணிப் பெண் ஒருவர், ‘எனக்கு சளி தொந்தரவு உள்ளது. நான் சாப்பிடலாமா?’ என்றார். வாழைப்பழம் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடுவதால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்பது உண்மைதான். ஆனால், இதுவே நோயை வரவைத்துவிடும் என்பது முற்றிலும் தவறான புரிதல்.

உணவு கலப்படம் பெருகி இன்று ஒரு பூதமாக நம் முன் நின்று அச்சுருத்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உணவு யுத்தம்’எனும் நூலில் பல்வேறு உணவுகளில் உள்ள கலப்படங்களை அலசி ஆராய்கிறார். வாழைப்பழத்தை விரைவில் பழுக்க வைக்க calcium carbide என்னும் திரவத்த கலக்கின்றனர் என்கிறார். இது புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்கள் உண்டாக வழிசெய்கிறது.

Representational Image

வாழைப்பழம் பார்க்க பல பலவென்று பொன் நிறத்திலும், நுனிகாம்பு பச்சை நிறத்திலும் காண்போர் கண்களைக் கவரும் வகையில் இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோல் முழுவதும் புள்ளிப் புள்ளியாக இருக்கும் வாழைப்பழத்தைப் பார்த்து சிலர் பழம் கெட்டுவிட்டது எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உண்மையில் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்படாத இயற்கையான பழங்கள். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இது.

குளிர்சாதன அறையில் பதப்படுத்தப்பட்டு பக்குவமாக ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படும் பழங்கள் மீது நாம் மோகம் கொள்கிறோம். ஆனால், விளைநிலத்தில் இருந்து நேரடியாகக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி வியாபாரிகளை நாம் கண்டுகொள்வதில்லை. உடைகளில் இருந்து உடைமைகள் வரை அனைத்திலும் வெளிநாட்டுப் பொருள்களுக்கு அடிமை ஆகிவிட்ட நாம், நம்மூர் ஏழைகளின் தோழன் வாழைப்பழத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...