முகப்பு சினிமா `விசாரணைக்குச் சென்றார்; கொரோனா தொற்றியது!’- பெரம்பலூர் காவலரால் தனிமைப்படுத்தப்பட் 41 பேர்

`விசாரணைக்குச் சென்றார்; கொரோனா தொற்றியது!’- பெரம்பலூர் காவலரால் தனிமைப்படுத்தப்பட் 41 பேர்

வி.களத்தூரில் பணிபுரிந்த காவலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்குச் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 41 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனோ வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். வி.களத்தூர் கிராமத்தில் உள்ள இரு இளைஞர்கள் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த நபர்களை அழைத்துச் செல்வதற்காகத் தலைமைக் காவலர் சென்றிருக்கிறார்.

அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வி.களத்தூர் கிராமம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. காவலருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்துக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் காவல் நிலையம்

காவல்நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டு அதன் அருகில் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களைத் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து ஆத்தூர் ஆர்.டி.ஓ துரையிடம் கேட்டபோது, “கொரோனாவில் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர், சொந்த ஊரான நாவக்குறிச்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குத் தொண்டை வலி, லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் ஆத்தூரில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவு அரசு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார். மருத்துவருக்கும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், நோய் அறிகுறி எதுவும் இல்லை.

சுழற்சி முறையில் போலீஸார்

போலீஸாரின் குடும்பத்தினர், அவரது உறவினர்கள் என 12 பேர், சேலம் அரசு மருத்துவமனையில், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவக்குறிச்சி கிராமத்தில் 38 பேர் மற்றும் ஆத்தூர் டாக்டர் குடும்பம் என மொத்தம் 41 பேரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகிறோம். அத்தோடு அவர்கள் வசித்து வந்த பகுதிகளையும் எங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறோம். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று முடித்துக்கொண்டார்.

Must Read

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி...

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு: ஹோல்டர் கேப்டன்!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதல் சர்வதேச டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. , மேற்கிந்திய அணிகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்...

ஆன்லைன் வீடியோக்களை அதிகமாகப் பார்க்கும் இந்தியர்கள்!

இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாளுக்கு போன்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாலும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவைகள் வழங்கப்படுவதாலும் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை...

குடும்ப அட்டைதாரர்களுக்கு 7500 ரூ: திருநாவுக்கரசு கோரிக்கை!

மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்சி சார்பாக கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நலிவடைந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து...

விரைவில் சர்வதேச விமான போக்குவரத்து? வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எப்போது தொடங்கப்படும் என்ற...