முகப்பு சினிமா `விசாரணை என்பதே தண்டனை' - தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா UAPA சட்டம்?

`விசாரணை என்பதே தண்டனை’ – தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா UAPA சட்டம்?

மத்திய அரசு, கொரோனா போன்ற நெருக்கடியான காலத்திலும் குடியுரிமைச் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து பழிவாங்கிவருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித் ஆகியோர்மீது சர்ச்சைக்குரிய உ.பா சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லி போலிஸ்

தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்ட தடா சட்டம், அரசுகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, கடந்த 2004-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு தடா சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், தடா சட்டத்தின் பிரிவுகள் ஏற்கெனவே அமலில் இருந்த சட்டவிரோத செயல்பாடுகள் (UAPA சட்டம்) தடைச் சட்டத்தில் (Unlawful Activities Prevention Act) சேர்க்கப்பட்டன. உபா சட்டத்தின்படி குறிப்பிட்ட அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அரசு அறிவிக்க முடியும். அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, கடந்த ஆண்டு உபா சட்டத்தில் புதிய திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி அமைப்புகளை மட்டுமில்லாமல், எந்தவொரு தனிநபரையும் (individual) தீவிரவாதியாக அறிவிக்கலாம் என திருத்தம் கொண்டு வரப்பட்டது. அமைப்பு சாராத அறிவு ஜீவிகள், விமர்சகர்களைக் குறிவைக்க அரசு இந்த திருத்தம் கொண்டுவருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சட்டம், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு மட்டுமே எதிரானது, தவறாகப் பயன்படுத்தப்படாது என அரசு வாய்மொழி உத்தரவாதம் அளித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு, உபா சட்டத்திருத்தத்தை பா.ஜ.க அரசு நிறைவேற்றியது.

நாடாளுமன்றம்

ஆனால், புதிய உபா சட்டத்தின் கீழ் அரசை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகில் கோகாய் தொடங்கி தற்போது காஷ்மீரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மஸ்ரத் ஜாரா வரை உ.பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பா சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியல்:

அகில் கோகோய்:

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் அகில் கோகோய், கடந்த டிசம்பர் 2019ல் மத்திய அரசு நிறைவேற்றியிருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ’தேசத்திற்கு எதிராகக் கலகம் செய்தார்’ என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மஸ்ரத் ஜாரா:

காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மஸ்ரத் ஜாரா, சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் என அவர்மீது உபா சட்டம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தின் மூலம் தேசத்துக்கும் பொது அமைதிக்கும் எதிரான கருத்துகளைப் பரப்பிவருகிறார் என காஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளது.

அகில் கோகாய் – ஆனந்த் டெல்டும்டே – கௌதம் நவ்லாகா – மஸ்ரத் ஜாரா – உமர் காலித்

ஆனந்த் டெல்முட்டே, கௌதம் நவ்லாகா:

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் பீமா கொரேகானில் வன்முறை ஏற்பட்டது. அதற்கு சில தினங்களுக்கு முன்னர், ஆனந்த் டெல்டும்டே எல்கர் பரிஷத் கூட்டத்தில் பேசிய உரை, வன்முறையைத் தூண்ட காரணமாக இருந்ததாக, அவர்மீது உபா சட்டம் பதியப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா மீதும் பீமா கொரேகான் வழக்கில் உபா சட்டம் போடப்பட்டுள்ளது.

உமர் காலித், ஹைதர், ஜர்கர்:

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணமாக இருந்துள்ளனர் என உமர் காலித் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஹைதர் மற்றும் ஜர்கர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி, செயல்பட்டுள்ளனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு எதுவும் இல்லையென்றும், குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லையென்றும் மூவரும் மறுத்துள்ளனர். கொரோனா போன்ற நெருக்கடியான நேரத்திலும், மத்திய அரசு பழிவாங்கும் விதத்தில் செயல்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா குற்றம் சாட்டியுள்ளார்.

உபா சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கௌதம் நவ்லாகா சரணடைவதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில் ’விசாரணையை எதிர்கொள்வது என்பதே தண்டனை’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய நீதியமைப்பில் வழக்கு விசாரணைகளில் ஏற்படுகிற கால தாமதமே இதற்குக் காரணம். கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்குகளில் நான்கில் மட்டுமே தீர்வு எட்டப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் எல்லாம் தற்போது வரை விசாரிக்கப்படாமலே இருக்கின்றன.

நீதித்துறை

ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்பதே சட்ட மரபாக இருந்துவந்துள்ளது. புதிய உ.பா சட்டத்தின்மூலம் குற்றம் சுமத்தப்பட்டு, அது நிரூபிக்கப்படுவதற்குள் ஒருவர் குற்றவாளி என்றாகிவிட்டது.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...