முகப்பு சினிமா `விசாரணை வளையத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய எஸ்.ஐ!’ - தஞ்சை வடமாநிலப் பெண் விவகாரத்தில் சிக்கிய...

`விசாரணை வளையத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய எஸ்.ஐ!’ – தஞ்சை வடமாநிலப் பெண் விவகாரத்தில் சிக்கிய 4 பேர்

தஞ்சாவூரில்,வடமாநில இளம் பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு என அழைத்துவரப்பட்டு அடித்துத் துன்புறுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணே புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இதுதொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட வீடு

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்கு காரில் கடந்த திங்கள்கிழமை வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரைக் கீழே தள்ளி விட்டுச் சென்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

`வீட்டு வேலைக்கு எனக் கூறி என்னை அழைத்து வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன்,பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்தனர். என்னைப் போல் தமிழ் தெரிந்த 3 பெண்களும் அந்த வீட்டில் இருந்தனர். அவர்களையும் காப்பாற்றுங்கள்’ என அந்தப் பெண் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்

இதையடுத்து இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் கலெக்டர் கோவிந்தராவ்,டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஸ்வரனுக்கும் மனு கொடுத்தனர்.

மேலும் பி.ஜே.பி மாநிலத் தொழிற்சங்கத்தின் சார்பிலும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை தீவிரபடுத்துவதற்கு முன்பே இது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்,மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெங்களூருவில் உள்ள முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது.

போலீஸ் ஸ்டேஷன்

வீட்டு வேலைக்கு எனக் கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 49) அவரது மனைவி ராஜம் ஆகியோர் அழைத்து வந்து தன்னை அடித்துத் துன்புறுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். மேலும், சாப்பாடு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால் உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து, செந்தில்குமார், ராஜம், ராமசந்திரன் உள்ளிட்ட 4 பேர் காரில் அழைத்து வந்து செங்கிப்பட்டி பகுதியில் தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “மேல வஸ்தாசவடி பகுதியில் தனியாக செந்தில்குமாருக்குச் சொந்தமான வீடு அமைந்துள்ளது. இங்குதான் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர். முதலில் அந்த வீட்டை சீல் வைத்ததுடன், தலைமறைவாகிவிட்ட செந்தில்குமார் தரப்பினரைத் தேடி வந்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள செந்தில்குமார்

அவர்கள் நடராஜபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, தற்போது கைது செய்துள்ளோம். இதில் போலீஸ் எஸ்.ஐயாக இருந்து லஞ்ச வழக்கு ஒன்றில் பிடிபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தன்னுடன் மூன்று பெண்கள் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்’’ என்றனர்.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.