முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் விமான டிக்கெட் ரத்து செய்துவிட்டு, 650 கி.மீ. பைக்கிலேயே வந்த தல அஜித்

விமான டிக்கெட் ரத்து செய்துவிட்டு, 650 கி.மீ. பைக்கிலேயே வந்த தல அஜித்

தல அஜித்திற்கு மற்றும் ரேஸிங் மீதான ஆர்வம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் பல முறை ரேஸ்களில் பங்கேற்று நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளதையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் அஜித் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது அங்கு படத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு ஸ்பெஷல் பைக்கை ஓட்டியுள்ளார். அந்த பைக் அஜித்துக்கு அதிகம் பிடித்துவிட்டதாம்.

ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு படக்குழு திரும்பவிருத்த நிலையில், தனது விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிடும்படி படக்குழுவிடம் கூறிவிட்டாராம். தான் பைக்கிலேயே ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

அஜித்தின் லக்கேஜ்களை படக்குழு கொண்டு வந்த நிலையில், அஜித் தன் கையில் பர்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் கிளம்பியுள்ளார். பெட்ரோல் நிரப்ப, உணவுக்காக மட்டுமே இடையில் தனது பயணத்தை நிறுத்தியுள்ளார் அஜித். இந்த தகவலை வலிமை படக்குழு தெரிவித்துள்ளது.

வலிமை படத்தில் அஜித்துக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். ஹெச்.வினோத் இயக்கிவரும் இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார். அவருக்கும் படத்தில் பைக் ஓட்டும் காட்சிகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்காக ஹுமா குரேஷி பைக் ஓட்ட பயிற்சி பெற்று வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத்துடன் அஜித் இணையும் இரண்டாவது படம் இது. படத்தின் முக்கிய சண்டை காட்சிகளுக்காக படக்குழு ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டு இந்தியாவிலேயே ஷூட்டிங் நடத்த பரிசீலித்து வருகிறது படக்குழு.

Must Read

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; காணாமல் போன பாலம் – கைகோர்த்த கன்னியாகுமரி இளைஞர்கள்!

மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. இதில் தண்ணீர் தேக்கத்தில் நீர் மின்நிலையம் அமைந்துள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர்...

சிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா : கேப்டன் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அணியின் ஆல் ரவுண்டர் . சமீபத்தில் இவர் தந்தையாகவுள்ள தகவலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக், ஆல்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து: உடல் சிதறி ஒருவர் பலி!

வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது....

பொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை!

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம்...

தனுஷ் படத்தில் நடிக்க பணம் தரவேண்டும் என மோசடி: மர்ம நபர் பற்றி கார்த்திக் நரேன் எச்சரிக்கை

துருவங்கள் 16 படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் . அதன் பிறகு நரகாசூரன் மற்றும் மாஃபியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மாஃபியா படம் சென்ற பிப்ரவரி மாதம்...