முகப்பு சினிமா வீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா? இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க!

வீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா? இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க!

மாசத்துக்கு இரண்டு தடவ பார்லருக்கோ சலூனுக்கோ போனோமா… தலையக் குடுத்தோமா… குனிஞ்சு செல்போன நோண்டினோமான்னு இருந்தவங்கள, தலை குனியும்படியா செய்திருச்சு இந்த கொரோனா வைரஸ். மனிதர்களின் அத்யாவசியத் தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு நாள்களில் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில், தலை போகிற காரியமான ஹேர் டை பற்றி யாரும் கவலைப்படவில்லை.

Dr.Selvi Rajendran

ஒரு மனிதனின் தோற்றமே அவனுக்குள்ளான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பூஸ்டர். அந்தப் பட்டியலில் ஹேர் டைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று பியூட்டி பார்லர், சலூன் என்று எதுவும் இயங்காத நிலையில், வீட்டிலேயே ஹேர் கட் முதல் ஹேர் கலரிங்வரை செய்யத் தொடங்கிவிட்டனர் மக்கள். போதாக்குறைக்கு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிவிடுகின்றனர். வீட்டில் ஹேர் டை அடிக்கும்போது சில விஷயங்களில் கவனம் தேவை என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். வீட்டிலேயே ஹேர் டை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களை விளக்குகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.

இயற்கையே சிறந்தது!

Henna

மருதாணி, அவுரி இலைப்பொடி, செம்பருத்தி, டீ டிகாஷன் போன்ற இயற்கையான பொருள்கள் சேர்த்த கலவையைஹேர் டையாகப் பயன்படுத்துவதே சிறந்தது. கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாராபினைலின்டையமின் (paraphenelenediamine (PPD) உள்ளிட்ட ரசாயனங்கள் காணப்படும். இதனால் மண்டை ஓட்டில் ஒவ்வாமை, அரிப்பு, சிவந்துபோதல், நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மண்டை ஓட்டுப் பகுதி மட்டுமில்லாமல் முகம், காது போன்ற பகுதிகளிலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஹேர் டை எப்போதெல்லாம் தலையில் படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஒவ்வாமைகள் ஏற்படும்.

மருத்துவரை அணுகுவதில் சிக்கல்!

Doctor

கடைகளில் வாங்கும் ஹேர் டைகளினால் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டால் மருத்துவரின் பரிந்துரையோடு ஒவ்வாமை மற்றும் அலர்ஜியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். லாக்டௌன் நேரத்தில் சரும மருத்துவ மருத்துவர்களிடம் ஆலோசனைக்குச் செல்வது சிரமமான காரியும். மருத்துவரை டெலி மெடிசின் மூலம் அணுக முடிந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளையெல்லாம் தவிர்க்க விரும்புவோர் இயற்கையான ஹேர் டைகளுக்கு மாறிவிடுவது நல்லது.

ரசாயனம் இல்லாத டை!

chemical free

இயற்கையான டைகளுக்கும் வழியில்லை என்றால் PPD என்ற ரசாயனமில்லாத (PPD free) ஹேர் டைகளைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம். அந்த டையை தலைமுடிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, காதின் பின்னால் சிறிய இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு சருமம் சிவந்து போதல், எரிச்சலுணர்வு போன்றவை ஏற்பட்டால் அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். அப்போது அதைப் பயன்படுத்தக்கூடாது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை என்றால் அதனைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். சோரியாசிஸ், எக்ஸீமா (Eczema) போன்ற சருமம் சார்ந்த பிரச்னையுள்ளவர்கள் அனைத்து டைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

சைனஸ் தொந்தரவு

Sinus problem

சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் ஹென்னா அல்லது ஹேர் டையை தலையில் பூசிவிட்டு அதிக நேரம் காத்திருக்கும்போது அதிலிருக்கும் ஈரப்பதம் பிரச்னையை அதிகரிக்கலாம். அதனால் சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் அதிக நேரம் ஹேர் டையை தலையில் பூசி வைத்திருக்காமல் குறைவான நேரத்தில் முடியை அலசிவிட வேண்டும். ஈரத்தலையுடன் அதிக நேரமிருக்காமல் வேகமாக உலர்த்திவிடவும் வேண்டும்.

Also Read: வசீகர சருமம், பளபள கூந்தல், பிரகாச கண்கள்… WFH புத்துணர்வு ஆலோசனைகள்!

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...