முகப்பு சினிமா `வீட்டுக்கு அனுப்பப்படும் நோயாளிகள்; நாடு முழுவதும் பரவிய வைரஸ்?’ - ஏமன் நிலையால் வருந்தும் ஐ.நா

`வீட்டுக்கு அனுப்பப்படும் நோயாளிகள்; நாடு முழுவதும் பரவிய வைரஸ்?’ – ஏமன் நிலையால் வருந்தும் ஐ.நா

தென்மேற்கு ஆசியாவில் உள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஏமன். அங்கு எப்போதும் உள்நாட்டுப் போர் நடந்த வண்ணமே இருக்கும் இதன் காரணமாகவும் அங்குப் பிரதான தொழிலாக இருந்த எண்ணெய் உற்பத்தி குறைந்துவிட்டதாலும் அரேபிய நாடுகளிலேயே ஏமன் மிகுந்த வறுமையில் உள்ள நாடாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஏமனில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என நம்பப்படுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

ஏமன்

ஐ.நாவின் மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே நேற்று ஜெனீவா மாநாட்டில் ஏமனின் நிலை பற்றிப் பேசியுள்ளார். “கொரோனா வைரஸ் ஏமன் முழுவதும் பரவியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்நாடு உண்மையில் ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும், அந்நாட்டின் சுகாதார முகமை சரிந்து, சமூக பரவல் அதிகரித்துவிட்டதால் வருங்காலத்தில் அந்நாட்டின் சுகாதார நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஏமனில் போதுமான மருத்துவ பணியாளர்களோ, வெண்டிலேட்டர்களோ, பாதுகாப்பு உபகரணங்களோ, தனிமைப்படுத்தப்படும் வார்களோ இல்லை என்பதால் கொரோனா பாசிட்டிவுடன் வரும் மக்களுக்கு சிகிச்சையாக்காமல் மீண்டும் வீடுகளுக்கே அனுப்பப்படுகின்றனர். தற்போது அந்நாடு சர்வதேச வான்வழியைத் திறந்துள்ளதால் அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் மருத்துவ உதவிகளை விரைந்து அளிக்க வேண்டும். தெற்கு ஏமனில் இருக்கும் முக்கிய கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை ஏமன் அரசு அறிவித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. எனவே அந்நாட்டுக்கு விரைவில் உதவிகளை வழங்க வேண்டும்” என லார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

லார்கே

தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட ஏமன், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து தொடர் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் இதுவரை 209 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read

உணவகங்களில் ஏ.சி.யை இயக்கலாமா? – மத்திய அரசு சொல்வது இதுதான்!!

பொதுமுடக்கத்தின் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உணவகங்களை ஜூன் 8 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை (மே 30)...

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...