முகப்பு சினிமா `வேலையில்லை... ரேஷன் பொருள்களும் பத்தவில்லை!' - ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம்

`வேலையில்லை… ரேஷன் பொருள்களும் பத்தவில்லை!’ – ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம்

கொரோனா வைரஸால் பெரும்பான்மையான நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதில் பலர் பணிக்குச் செல்லாத சூழலால் வறுமையில் வாடுகின்றனர்.

சுரேஷ் தனது வீட்டில்

ஆங்காங்கே தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனாலும் உதவிகள் எல்லா இடங்களுக்கும் செல்லாததால் பலரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இதேபோல் அரளிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 4 குழந்தைகளுடன் கஷ்டத்தை அனுபவித்துவருதாக தெரிவித்தார். இது குறித்து சுரேஷ் நம்மிடம், “சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர்.

சுரேஷ் குடும்பத்துடன்

எலெக்ட்ரிஷியனாக இருந்த நான் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன். பல்வேறு மருத்துவம் பார்த்து கடன் ஆனதுதான் மிச்சம். அதற்குப்பின் போதும் என்று வீட்டில்தான் கிடக்கிறேன். இடுப்புக்குக் கீழ் எனக்கு எதுவும் செயல்படாது.

சுரேஷ்

3 பெண் குழந்தை, 1 பையனையும் அவர்களுடன் என்னையும் என் மனைவி பிள்ளைபோல் பாதுகாக்கிறார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் என் மனைவி வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டம் நிலவுகிறது. முழுமையான வீடு இல்லாத சூழலில் எல்லா கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அரசு சார்பாக ரேஷன் பொருள்கள் கொடுத்தாலும் எங்களுக்குப் போதவில்லை. வீட்டில் 6 நபர்கள் இருக்கிறோம். ரேஷன் பொருள்கள் பாதிநாள்கள் கூட வருவதில்லை. எனவே, உணவுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் வீட்டில் மீன், கறிகள் எடுத்ததில்லை. தற்போது காய்கறி கூட வாங்க முடியவில்லை. எனவே, இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது” என்றார்.

Must Read

நடு இரவில் பகலை போல வெளிச்சம்- பாரிய விண் கல் வீழ்ந்தது வீடியோவில் பதிவு

நேற்றைய தினம் ஆர்மேனிய நாட்டில் உள்ள, யெறிவான் என்னும் நகரில் இரவில் பகல் போல தோன்றும் அளவு பெரிய வெளிச்சம் ஒன்று தோன்றியது. இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள்.  ஏதவது ராக்கெட் ஒன்று வெடித்ததா...

“சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட வாங்க”

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில்...

அரசு விழாவுக்கு வலிய அழைத்து அவமானப்படுத்தப்பட்ட எம்.பி., எம்எல்ஏ!!

மாவட்டம், அஞ்சுகிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 36.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொளிகாட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து...

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...