முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் வேலை இல்லாமல் தவிக்கும் ஐஐடி மாணவர்கள்!

வேலை இல்லாமல் தவிக்கும் ஐஐடி மாணவர்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 30 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் மக்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கின்றனர். தேடி அலைவோருக்கான வேலைவாய்ப்புகளும் காணாமல் போயுள்ளன. ஏற்கெனவே இந்தியாவில் போதிய அளவில் வேலை உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பால் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போயுள்ளது. ஐஐடியில் படித்த மாணவர்களின் பணியமர்த்தலுக்கான இக்காலத்தில் ஊரடங்கு தடையால் வேலை கிடைப்பது தடைபட்டுள்ளது. ஐஐடியில் படித்தவர்களில் சராசரியாக 10இல் 3 பேருக்கு இதுவரையில் வேலைவாய்ப்புகளுக்கான அழைப்புகள் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. ஐஐடி நிறுவனங்கள் சார்பாக வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஆன்லைன் மூலமாக பணியில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடியில் படித்து முடித்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நடத்தி வரும் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஐஐடி முன்னாள் மாணவர்களைத் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்புகள் ஏதேனும் இருந்தால் வாய்ப்பு வழங்கும்படி ஐஐடி நிறுவனங்கள் சார்பாகக் கேட்கப்பட்டுள்ளது. மெட்ராஸ், கான்பூர், டெல்லி, ரூர்கி, கவுகாத்தி, பாம்பே ஐஐடி நிறுவனங்களில் படித்த மாணவர்களில் கார்ட்னர் நிறுவனத்திடமிருந்து மட்டுமே வேலைவாய்ப்புக்கான அழைப்புகள் வந்துள்ளன.

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் 1,331 மாணவர்களில் 924 பேருக்கு மட்டுமே வேலை உள்ளது. பாம்பே ஐஐடி நிறுவனத்தில் 30 சதவீதப் பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. ரூர்கி ஐஐடி நிறுவனத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை ஆன்லைன் மூலமாகத் தேடி வழங்கும் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை மாத மத்தியில் வேலை வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று பாம்பே ஐஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பீதியால் நாடு முழுவதும் உள்ள ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...