முகப்பு சினிமா `வேலை இல்லை; சாப்பாடு இல்லாம எப்படி வாழ முடியும்?!’- கேரளாவில் தவிக்கும் கும்பகோணம் இளைஞர்கள்

`வேலை இல்லை; சாப்பாடு இல்லாம எப்படி வாழ முடியும்?!’- கேரளாவில் தவிக்கும் கும்பகோணம் இளைஞர்கள்

கேரள மாநிலத்துக்கு கட்டட வேலைக்குச் சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த 30 பேர் ஊருக்கு வர முடியாமல் அங்கேயே பசியும் பட்டினியுமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்களின் நிலையைக் கூறி தமிழக அரசு தங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலக்கமான குரலில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கேரளாவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனாவால் அதிக பேர் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் இதைக் கட்டுக்குள் கொண்டுவர கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதேபோல் தமிழக அரசும் அனைத்து மாவட்ட, மாநில எல்லைகளையும் மூட உத்தரவிட்டதுடன் வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் எனத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதனால் தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்த சாமானிய மக்கள் வருமானம் இல்லாததால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாகி வந்தாலும் வேறு வழியில்லை, இதை கடந்துதான் ஆக வேண்டும் என்கிற நிலைமை உள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கட்டட வேலைக்கு கேரளாவுக்குச் சென்ற 30 பேர் கொரோனா பாதிப்பால் வேலை இல்லாமல் போனதால் பசியும் பட்டினியுமாக, ஊருக்கு வர முடியாமல் தவித்து வருவதுடன் தங்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் வாட்ஸ்அப் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Also Read: `ஆன்லைன் கவுன்சிலிங்; ஒரேநாளில் 276 டாக்டர்கள் நியமனம்!’ -பிளான் சி-யை கையிலெடுத்த கேரளா #corona

அதில் பேசும் இளைஞர், “எல்லோருக்கும் வணக்கம், கும்பகோணம் அருகில் உள்ள திருவள்ளியக்குடி, பாலாக்குடி, மேலமராயம், கீழ்வேளூர் புழுதிக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 பேர் கேரளா மாநிலம் கண்ணுார், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டட வேலை செய்வதற்காக கடந்த 20 நாள்களுக்கு முன்பு கிளம்பி வந்தோம். வந்த வருமானத்தை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்ததுடன் மீதியை சாப்பாட்டுக்குச் செலவு செய்தோம். இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Also Read: `வாழு, வாழ விடு’ அன்றே சொன்ன அஜித்தும் ஒரு இலுமினாட்டியா?! – `கொரோனா’ கலாய்பீடியா

இதையடுத்து, வேலையில்லாமல் போனதால் வருமானம் இல்லை. அதனால் நாங்கள் பசியும் பட்டினியுமாக இருக்கிறோம். `நாங்க எங்க ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுங்க’ என கேரள போலீஸாரிடம் கேட்டோம். ஆனால், `அதெல்லாம் முடியாது; இங்கேயே இருங்க’ எனக் கூறிவிட்டனர். சாப்பாடு இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்? எனவே, கேரள அரசும் தமிழக அரசும் இணைந்து எங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் வகையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்ய, முழு ஒத்துழைப்பையும் நாங்க தரத் தயாராக உள்ளோம். ஆனால், சீக்கிரமே சொந்த ஊர் போய்ச் சேர்வதற்கு நம்ம தமிழக அரசுதான் வழிவகை செய்ய வேண்டும்’’ என உருக்கமான குரலில் தெரிவித்தனர்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...