முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஸ்மார்ட்போனில் 600 MP கேமரா... சாம்சங்கின் அடுத்த அதிரடி

ஸ்மார்ட்போனில் 600 MP கேமரா… சாம்சங்கின் அடுத்த அதிரடி

இந்த நவீன ஸ்மார்ட்போன் யுகத்தில் தங்களின் வாடிக்கையாளர் சந்தையைத் தக்கவைத்து விரிவுப்படுத்த புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியும் வசதிகளை மேம்படுத்தியும் மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிப்போட்டு வருகின்றன. அப்படி தென் கொரிய நாட்டு நிறுவனமான சாம்சங்கை பொறுத்தவரை அதன் லேட்டஸ்ட் வெளியீடான 108 மெகாபிக்ஸல் சென்சாரை கொண்ட S20 அல்ட்ராவின் விற்பனை கடந்த சில மாதங்களாக முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

Samsung Unpacked Event

மொபைல் சாதனங்களின் புகைப்பட செயல்திறனை உயர்த்துவது ஒருபுறம் இருக்க தனது போன்களின் கேமரா மெகா பிக்ஸலை உயர்த்துவதில் கடந்த சில ஆண்டுகளாகவே அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது சாம்சங். 12 பிக்ஸல்களில் இருந்த கேமராக்களை 64 பிக்ஸல், 108 பிக்ஸல் என வெகு விரைவாக அப்டேட் செய்த அந்நிறுவனம் தற்போது ஒரு புதிய ஆச்சரிய அப்டேட்டை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் சென்சார் வியாபார தலைவரான யோன்கின் பார்க் தங்கள் நிறுவனம் 600 பிக்ஸல் திறன் கொண்ட சென்ஸார்களை தயாரிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுவருவதாக கூறியுள்ளார். மேலும் இந்த சென்ஸாரானது சுமார் 500 பிக்ஸல் வரை செயல்திறன் கொண்ட மனித கண்களை மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பில் அவர் வெளியிட்டதாவது, “ தற்போது அதிக பிக்ஸல் திறன் கொண்ட சென்ஸார்களை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே அதிக அளவில் பயன்படுத்திவருகிறோம். ஆனால் எதிர்கால வாகனங்கள் மற்றும் டிரேங்களை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்றார். இதுமட்டுமன்றி பல்வேறு வகையான வாசனைகள் மற்றும் ருசிகளை கண்டறியும் சென்ஸார்களை தயாரிக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: பிரீமியம் ஃப்ளிப் போன், பிரமிக்க வைக்கும் S20 சீரிஸ்… இது சாம்சங் மேஜிக்!

64 மெகாபிக்ஸலில் இருந்து ஆறே மாதங்களில் 108 மெகாபிக்ஸலுக்கு தாவிய அந்நிறுவனம் 600 பிக்ஸல் சென்ஸார் எப்போது வெளியாகும் என்று எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இது நிச்சயம் பயன்பாட்டிற்கு வரும் என உறுதியளித்துள்ளது சாம்சங்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...