முகப்பு சினிமா ஸ்மார்ட் `ஆன்லைன்’ வொர்க்.. தனிமனித இடைவெளி..! -2 ஆண்டுகளுக்கு பிளான் தயாரித்த தென்கொரியா #Corona

ஸ்மார்ட் `ஆன்லைன்’ வொர்க்.. தனிமனித இடைவெளி..! -2 ஆண்டுகளுக்கு பிளான் தயாரித்த தென்கொரியா #Corona

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கியதாக் கூறப்படும் கோவிட் -19 வைரஸால் சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தைத் தொடவுள்ளது. இதனால் கொரோனாவைக் கண்டு மொத்த உலகமும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். கொரோனா வைரஸால் அமெரிக்கா சின்னாபின்னமாகி அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது, அதன் வரிசையில் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தென் கொரியா

ஆனால் வைரஸால் முதலில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீனாவும், இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட தென்கொரியாவும் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 2-வது இடத்திலிருந்தது. ஆனால் தற்போது அந்த நாடு மிகவும் பின்னுக்குச் சென்றுள்ளது. தென்கொரியாவின் துரித மற்றும் கடுமையான நடவடிக்கையே அங்கு வைரஸின் பரவல் குறைந்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

Also Read: `மெர்ஸிலிருந்து கற்ற பாடம்; 20,000 பேருக்குச் சோதனை!’ – கொரோனாவை அடக்கிய தென்கொரியா

தென்கொரியாவைப் பொறுத்தவரை தற்போது அங்கு 10,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240-ஆக உள்ளது. உலகிலேயே வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு ஒரு நாளுக்கு 20,000 மக்களுக்குக் கொரோனா சோதனை நடத்துகிறது தென்கொரியா. அதேபோல் அங்குதான் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் அமைத்தும் வைரஸ் சோதனை செய்யப்படுகிறது.

சீனா -கொரோனா

இந்த கடுமையான நேரத்திலும் மிகவும் திறமையாகச் செயல்பட்டு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக்க நடத்தி முடித்து அதில் ஆளும் கட்சி அமோக வெற்றியும் பெற்றுவிட்டது. தென்கொரியாவில் கடந்த சில நாள்களாக வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலங்கங்களாகவே இருப்பதாகவும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இதுவரை அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 மட்டுமே அதிகரித்துள்ளது. எனவே விரைவில் தங்கள் நாடு பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும் எனத் தென் கொரிய அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மே 5-ம் தேதி வரை தென்கொரியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த சில வல்லுநர்கள், அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் இருக்கும் எனக் கணித்துள்ளதால் அந்த 2 ஆண்டுக்கும் தங்கள் நாடு மற்றும் மக்கள் செய்ய வேண்டிய திட்டத்தை தற்போதே தயாரித்து வெளியிட்டுள்ளது தென் கொரிய அரசு. பணியிடங்கள், போக்குவரத்து, உணவகங்கள், ஷாப்பிங், விளையாட்டு, கை கழுவுதல், சமூக விலகல், கிருமி நாசினி தெளிப்பு போன்ற பொதுவான விதிகளில் தொடங்கி நடத்தை விதிகள் வரை அனைத்தையும் விரிவாக அறிவித்துள்ளனர்.

தென் கொரியா

அதன்படி, வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் அரசு அறிவிக்கும் வரை வேலைக்கு அல்லது கூட்டமான இடங்களுக்குச் செல்லக் கூடாது. ஆலோசனைக் கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை ஆன்லைனிலேயே அதிகமாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள் போன்ற இடங்களில் மக்கள் அதிக நேரத்தைச் செலவிட வேண்டாம், அங்கு நேர கட்டுபாடு விதிக்கப்பட வேண்டும். அதேபோல் யாருடனும் ஒரே பாத்திரத்தில் உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் இருக்கைகள் வைக்க வேண்டாம், பெரும்பாலும் ஆன்லைன் கட்டணத்தையே அனைத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Also Read: `கடுமையான கட்டுப்பாடு; கட்டாய தனிமனித இடைவெளி’ – தைரியமாகத் தேர்தலை நடத்தும் தென்கொரியா #Corona

மத வழிப்பாட்டு தலங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம், பொது சுகாதாரத்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், கை கழுவும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் எந்த பொருளையும் சோதிக்கக் கூடாது (ட்ரையல்) கடைகளில் குறைந்தது 1 மீட்டாராவது சமூக இடைவெளி அவசியம். போக்குவரத்திலும் சமூக இடைவெளி கட்டாயம், இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும். முடிந்த வரை தனியாக பயணம் செய்வது நல்லது” போன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து முழுமையாக மீள முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...