முகப்பு சினிமா “ஹோம் டைம், மாம் டைம்” - வைரலாகும் நடிகர் சிரஞ்சீவியின் முதல் ட்விட்டர் போஸ்ட்!

“ஹோம் டைம், மாம் டைம்” – வைரலாகும் நடிகர் சிரஞ்சீவியின் முதல் ட்விட்டர் போஸ்ட்!

உலகம், கொரோனாவால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதிப்படுத்துதல், சிகிச்சை, குவாரண்டைன், அதிகரிக்கும் மரணங்கள் என நம் மனம் முழுவதையும் கொரோனா அச்சமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், வாகனங்களின் இரைச்சலும் புகையுமின்றி வெறுச்சோடிய சாலைகள், மனிதரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில், பறவைகளும் விலங்கினங்களும் இந்த உலகம் எங்களுக்கும் சொந்தம் என்பதை உணர்த்தும் வகையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்சிகள் தற்போது உலகெங்கும் நிகழ்ந்து வருகின்றன.

கொரோனா

அந்த வகையில் மனிதர்களும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் நவீனமயமான இந்த நூற்றாண்டில் கொரோனா அச்சம் ஒரு புறம் குடி கொண்டிருந்தாலும் கூட, ஆர அமர உட்கார்ந்து குடும்பத்தாருடன் நேரம் செலவளிக்க கொரோனா வைரஸால் வழிவகை பிறந்திருக்கிறது என சாதகமான கண்ணோட்டத்தில் இந்தக் கடினமான நாள்களை அணுகலாம்.

அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வ்ட்டில், “ஹோம் டைம், மாம் டைம்” எனக் குறிப்பிட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி, தனிமைப்படுத்துதலில் இருக்கும் போது தனது தாய் அஞ்சனாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பதிவில், `இந்தத் தருணமானது நமது பெற்றோர்களையும் முதியவர்களையும் கவனித்துக் கொள்ளக் கூடிய தருணமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ள சிரஞ்சீவி, ‘இந்தத் தனிமைப்படுத்துதல் காலங்களில் என்னைப் போல் உங்கள் தாயாருடன் அல்லது வீட்டில் முதியவர்களுடன் எடுத்த செல்ஃபி ஒன்றைப் பதிவிடுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவியின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வரும் வேளையில், ட்விட்டர் தளத்தில் இன்று தான் சிரஞ்சீவி இணைந்தார் என்பதும், தற்போது அவர் வெளியிட்டிருக்கக் கூடிய புகைப்படம்தான் சமூகவலைதளங்களில் அவர் பதிவிட்ட முதல் புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்துள்ளனர்.

சிரஞ்சீவி இன்று ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கும் வேளையில், மலையாள நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, நடிகை ராதிகா சரத்குமார், சுஹாசினி, இயக்குநர் ராஜமெளலி எனப் பல திரை நட்சத்திரங்கள் அவரை வரவேற்கும் விதமாக ட்வீட் செய்துள்ளனர். இந்த ட்வீட்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...