முகப்பு சினிமா ₹12,000 கோடி இழப்பு... உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

₹12,000 கோடி இழப்பு… உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம், BS-4 ரக வாகனங்களை மார்ச் 31, 2020-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கம் காரணமாக ₹6,400 கோடிக்கும் மேற்பட்ட BS-4 ரக வாகனங்கள் விற்கப்படாமல் உள்ளன. இதில் 7,00,000 இருசக்கர வாகனங்களும்,15,000 கார்களும்,12,000 வணிக வாகனங்களும் அடங்கும். இருசக்கர வாகனங்களின் மதிப்பு ₹3,850 கோடியாகவும், பயணிகள் வாகனங்களின் மதிப்பு ₹1,050 கோடியாகவும், வணிக வாகனங்களின் மதிப்பு ₹1,440 கோடியாகவும் உள்ளது.

ஆட்டோமொபைல்

மார்ச் மாத தொடக்கத்தில் இந்த வாகனங்களின் விற்பனை சற்றே சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விற்பனை சரிந்தது. இப்போது, கட்டாய முடக்கம் காரணமாக வாகனங்கள் விற்பனை செய்யப்படவில்லை.

இதனால் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA), இந்திய வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM), ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஆகியவை விற்பனை காலத்தை நீட்டிக்க  உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது. 21 நாள் ஊரடங்கு இருக்கும் நிலையில், முக்கியமான வழக்குகளை மட்டுமே கையாள்கிறது உச்ச நீதிமன்றனம். இந்நிலையில் இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் தயாரிப்பு

FADA அமைப்பு BS-4 ரக வாகனங்களை உற்பத்தியாளர்களே திரும்ப வாங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு SIAM அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இறுதி நாள் நெருங்கப்போகும் காரணத்தால், விற்பனையாளர்களே தங்களது பெயர்களில் வாகனங்களைப் பதிந்து மீண்டும் விற்பதற்கான சூழலும் உருவாகியுள்ளது.

ஒருவேளை உச்ச நீதிமன்றம் முன்பே சொன்னதுபோல் மார்ச் இறுதிக்குள் BS-4 ரக வாகனங்களை விற்க முடியவில்லை எனில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ₹12,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படலாம். தற்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

Must Read

ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு? மோடி சொன்னது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ஆம் தேதி நாட்டையே 21 நாட்கள் முடக்குகிறோம் என்றார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த...

இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா… அரசு ஆய்வுகளே ஆதாரம்…

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள்...

உதவிக்கரம் நீட்டும் கார்பரேட் நிறுவனங்கள்!

சீனாவில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும் இந்தியாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

`ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை… 50 பகுதிகள் அடைக்கப்படும்!’- திருச்சி மாவட்ட ஆட்சியர்

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், மாவட்ட ஆட்சியர் சிவராசு. அப்போது, “திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுத்திடவும், பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைக்...

வீட்டு தோட்டத்துக்கான விதைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: விவசாய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய...