முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் 15 வயதில் வந்த ஆசை அது, அம்மாவுக்கு தெரியாமல் கற்றுக்கொண்டேன்: மாளவிகா மோகனன்

15 வயதில் வந்த ஆசை அது, அம்மாவுக்கு தெரியாமல் கற்றுக்கொண்டேன்: மாளவிகா மோகனன்

நடிகை சமீபத்தில் ட்ராக்கில் ரேஸ் ஓட்டிய வீடியோ இணையத்தில் படுவைரலாக பரவியது. அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா என பலரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

பைக் மீதான ஆர்வம் எப்படி வந்தது என அவர் பேட்டி அளித்துள்ளார். தனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது என்றும் ஆனால் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்று மாளவிகா கூறியுள்ளார்.

“18 வயது ஆன பிறகு தான் என்னையும் எனது சகோதரையும் டிரைவிங் கற்றுக்கொள்ள அனுமதித்தார்கள். நான் 18வது பிறந்தநாள் கொண்டாடிய அதே வாரத்தில் ஒரு டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்துவிட்டேன்.”

“நாங்கள் வசித்த பில்டிங்கில் நண்பர் ஒருவர் Royal Enfiled வைத்திருந்தார். என் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த பைக் ஓட்ட பழகினேன். நான் bulletல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது சிறந்த விஷயம் என நினைக்கிறேன், தற்போது என்னால் பைக்கை எளிதாக பேலன்ஸ் செய்ய முடிகிறது” என கூறியுள்ளார்.

மேலும் ரேஸ் ட்ராக்கில் பைக் ஓட்டியது பற்றி பேசிய அவர் “நார்மலான ரோட்டில் அதிக வேகத்தில் செல்ல முடியாது. அது பாதுகாப்பானதும் அல்ல. நகரத்திற்குள் அதிவேகத்தில் செல்வதை பரிந்துரைக்கமாட்டேன். சென்ற வருடம் ஜூனில் டெல்லி சென்றிருந்தபோது, அங்கு நண்பர்களை ரேஸ் சர்கியூட்டில் சந்தித்தேன். அவர்கள் அங்கு ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தார்கள்.”

“அப்போது நானும் ரேஸ் பைக் ஓட்டலாம் என நினைத்தேன். ஓட்டவும் செய்தேன். ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை. ஆனால் என்ஜாய் செய்தேன்” என கூறியுள்ளார் மாளவிகா.

Must Read

தமிழர்களே ஜாக்கிரதை: இன்று லண்டனில் மகரந்த(பொலுன்) துகள் காற்றில் அதிகம்- அல்ர்ஜி வரலாம்

லண்டனிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று அளவுக்கு அதிகமாக பொலுன் என்று சொல்லப்படும் மகரந்த துகள்கள் காற்றில் அதிகமாக இருப்பதாக நுன் துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு இதனால் அலர்ஜி (ஒவ்வாமை)...

ஜல்ஜீரா முதல் பஜ்ஜிவரை… கொளுத்தும் வெயிலுக்கு கூலான நுங்கு ரெசிப்பீஸ்!

கோடைக்காலத்தின் குளுகுளு சுகங்களில் நுங்கு என்கிற ஐஸ் ஆப்பிளுக்கு முக்கிய இடமுண்டு. தினந்தோறும் சாப்பிட்டாலும் சலிக்காது. அதேபோல் பனங்காய்களைச் சீவி, நுங்கு அடிபடாமல் பதமாக எடுக்கிற லாகவமும் பார்க்கச் சலிக்காது. பனங்காயின் மேலே,...

`பாதிக்கப்படப்போவது நெசவாளர்களும்தான்!’ -மின்சாரத் திருத்தச் சட்டத்தால் கொதிக்கும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மின்திருத்தச்சட்டம் கார்ப்பரேட்களுக்காகக் கொண்டுவரப்படுகிறது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அதற்கு, அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ``மின் மோட்டாருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து இறுதி அஞ்சலி...

`நாட்டின் முதல் நடமாடும் கொரோனா சோதனை மையம்..!’ – மகாராஷ்டிராவில் புதிய முயற்சி

கொரோனாவின் தாக்கம் நாளுக்குள்நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு இந்தியாவில் இல்லை....

`புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தொழிலாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது!உச்ச நீதிமன்றம்புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் உடனடியாக தங்களது சொந்த...