Home செய்திகள் உலக செய்திகள் குடிபோதையில் உறங்கிய இளைஞர்.. உடல் எரிந்து சாம்பல்

குடிபோதையில் உறங்கிய இளைஞர்.. உடல் எரிந்து சாம்பல்

பிரித்தானியா தலைநகர் லண்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விம்பிள்டன் ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார்.இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர், போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து மரக்கட்டை போல் ஆகியுள்ளார், பின்னர், உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்ளனர்.இளைஞரை சோதனை செய்த மருத்துவக் குழுவினர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

`சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி

1991-ல் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி'. அதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, இதே குறைபாடு உள்ளவராகத்தான் அப்படத்தில் நடித்திருப்பார். `ரெண்டு மோட்டார் சைக்கிள் வருது குறுக்கால போயிடலாம்னு...

அஜித் நியூ லுக்

நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபேற்பை...

வரவிருக்கும் செய்தி தாவல் அம்சத்தை நிர்வகிக்க மூத்த பத்திரிகையாளர்களை நியமிக்க பேஸ்புக்

பேஸ்புக் அதன் மொபைல் பயன்பாட்டின் ஒரு பகுதியான அதன் வரவிருக்கும் நியூஸ் தாவலுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு “சிறிய குழுவை” பத்திரிகையாளர்களை பணியமர்த்துவதன் மூலம் செய்திகளைக் கட்டுப்படுத்துகிறது. நியூஸ் தாவலில் உள்ள பெரும்பாலான...

Brexit பற்றி போரிஸ் ஜான்ஸன் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தவில்லை: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்ஸின் தங்களுக்கு எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் கூறுகையில், பிரிக்ஸிட்டுக்குப்...

இந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக்

கமலுஹாசனும், விவேக்கும் இயக்குநர் சிகரத்தின் அறிமுகம் என்றாலும், இது வரையிலும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை. இது பற்றிய தனது ஏக்கத்தை எத்தனையோ போது மேடைகளில் வெளிப்படுத்தியிருந்தார். யானைக்கும் அடிசறுக்கும் என்று சொல்வார்கள்....