Home சினிமா விமர்சனம் கோமாளி திரை விமர்சனம்

கோமாளி திரை விமர்சனம்

கதைக்களம்

ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இத்தகைய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

 

 

 

கதைக்களம்

படத்தின் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார்.

அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார்.

ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார்.

கோமாவில் இருந்து 16 வருடங்கள் கழித்து ரவி எழ, அதன் பின் இந்த உலகமே அவருக்கு புதிதாக மாறுகின்றது, அந்த நேரத்தில் ரவிக்கு மிகப்பெரிய பணத்தேவை ஒன்று வர, ரவிக்குமார் ஜெயம்ரவியிடம் திருடி சென்ற சிலை, விலைமதிப்பற்றது.

அதை கைப்பற்றிவிட்டால், எப்படியாவது பணத்தேவையை பூர்த்தி செய்துவிடலாம் என ரவி ப்ளான் போடுகின்றார், அதன் பின் அவருடைய ப்ளான் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றி அலசல்

ஜெயம் ரவி கண்டிப்பாக வித்தியாசமான கதையை தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று உறுதியாக உள்ளார், அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களம் தான் இந்த கோமாளி, கோமாவில் இருந்து எழுந்து, டிவியை பார்த்துவிட்டு இன்னும் சித்தி சீரியல் ஓடுகிறதா என்று கேட்பது, உன் கண் முன்னே ஒரு பெண்ணை கவர்கிறேன் என பள்ளிக்கூட பெண்ணிடம் பேசுவது என அலும்பு செய்துள்ளார்.

இவருக்கு பக்க பலமாக படம் முழுவதுமே யோகிபாபு கவுண்டர் சிக்ஸர் தான், அதிலும் ஒரு மொக்கை ஜோக் நான் சொன்னது என சொல்லி அவர் கைத்தட்டல் வாங்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சரவெடி.

இந்த கோமாளி கான்செப்ட்-ஆகவெ எஒரு எக்ஸேட்மெண்ட் வரக்கூடியவை தான், நம் வாழ்க்கையில் திடீரென்று 16 வருடம் போக, தற்போதுள்ள வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு குழந்தை போல் தான் நம் மனநிலை இருக்கும், அதெ நேரத்தில் அந்த குழந்தை மனம் பலருக்கும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதை காட்சிகள் வடிவில், அதுவும் காஜல் பேண்ட் கிழிந்துள்ளது என மறைப்பது, அவருக்கு முத்தம் கொடுப்பது என ஜெனேரேஷனை புரிந்துக்கொள்ளாமல் ரவி தவிக்கும் காட்சியும் செம்ம.

ஆனால், ஒரு சில இடங்களில் இவை கொஞ்சம் க்ளிஷேவாகவும் மாறுகின்றது, 90ஸ் கிட்ஸ் ஓகே என்றாலும், தற்போதுள்ள 2கே கிட்ஸிற்கு அவர்கள் தாத்தா சொல்லும் ‘நாங்கெல்லாம் அந்த காலத்துல’ என்று கதை சொல்லும் மனநிலையில் தான் இருந்திருப்பார்கள்.

ரவிக்குமாரிடம் அந்த சிலையை திருட முயற்சிக்கும் காட்சி ஏதோ நானும் ரவுடி தான் படம் போல மாறுகின்றது என பார்த்தால், எந்த ஒரு அடிதடி இல்லாமல், கிளைமேக்ஸ் 10 நிமிடம் எமோஷ்னலாக கொண்டு சென்றது சூப்பர்.

படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை, பாடல்களும் துள்ளல் தான், ரிச்சர்ட் ஒளிப்பதிவு செம்ம கலர்புல்.

க்ளாப்ஸ்

படத்தின் கான்செப்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது.

யோகிபாபுவின் ஒன் லைன் காமெடி கவுண்டர் நல்ல ரீச் ஆகின்றது.

கிளைமேக்ஸ் எமோஷனலாக கொண்டு சென்ற விதம்.

பல்ப்ஸ்

காஜல் எல்லாம் படத்தில் எதற்கு என்று கேட்கும் நிலை தான், வருகிறார், ஆடுகிறார், பாடுகிறார் அவ்வளவே.

திரைக்கதையில் பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இல்லை.

மொத்தத்தில் கோமாளி டைட்டிலுக்கு ஏற்றது போல் கண்டிப்பாக சிரிக்க வைப்பார், கொஞ்சம் கருத்தையும் கூறி கிளைமேக்ஸில் கலங்க வைப்பார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

`சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி

1991-ல் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி'. அதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, இதே குறைபாடு உள்ளவராகத்தான் அப்படத்தில் நடித்திருப்பார். `ரெண்டு மோட்டார் சைக்கிள் வருது குறுக்கால போயிடலாம்னு...

அஜித் நியூ லுக்

நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபேற்பை...

வரவிருக்கும் செய்தி தாவல் அம்சத்தை நிர்வகிக்க மூத்த பத்திரிகையாளர்களை நியமிக்க பேஸ்புக்

பேஸ்புக் அதன் மொபைல் பயன்பாட்டின் ஒரு பகுதியான அதன் வரவிருக்கும் நியூஸ் தாவலுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு “சிறிய குழுவை” பத்திரிகையாளர்களை பணியமர்த்துவதன் மூலம் செய்திகளைக் கட்டுப்படுத்துகிறது. நியூஸ் தாவலில் உள்ள பெரும்பாலான...

Brexit பற்றி போரிஸ் ஜான்ஸன் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தவில்லை: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்ஸின் தங்களுக்கு எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் கூறுகையில், பிரிக்ஸிட்டுக்குப்...

இந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக்

கமலுஹாசனும், விவேக்கும் இயக்குநர் சிகரத்தின் அறிமுகம் என்றாலும், இது வரையிலும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை. இது பற்றிய தனது ஏக்கத்தை எத்தனையோ போது மேடைகளில் வெளிப்படுத்தியிருந்தார். யானைக்கும் அடிசறுக்கும் என்று சொல்வார்கள்....