Home தொழில்நுட்பம் 5G தொழில்நுட்பம்

5G தொழில்நுட்பம்

5G டெக்னாலஜியில் சாதிப்பதற்காக ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில் ஜப்பானும், தென் கொரியாவும் கூடுதல் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சிதான் தென்கொரியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான KT கார்ப்பரேஷன் 5G டெக்னாலஜியை குளிர்கால ஒலிம்பிக்ஸில் நிறுவியது. வருகிற 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானும் தன்னுடைய 5G டெக்னாலஜியை அறிமுகம் செய்யவிருக்கிறது. 5G ரேஸில் ஜப்பானும் தென் கொரியாவும் சரி. இந்தியா என்ன செய்துகொண்டிருக்கிறது?

ஏன் அந்த தாமதம்?

2009-ம் ஆண்டே உலகிற்கு 4G அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தது 2012-ல். அதுவும் அறிமுகம் மட்டும்தான். வாடிக்கையாளர்களிடம் பெருமளவில் சென்று சேர்ந்தது 2016-ம் ஆண்டுதான். இடையே சுமார் 7 ஆண்டுகள் இடைவெளி. இதற்கு முந்தைய 3G, 2G விஷயத்திலும் இதே சங்கதிதான். முதலில் வேறு நாடுகளால் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பல ஆண்டுகள் கழித்தே இந்தியாவுக்கு வரும். இதற்கு மிக முக்கியமான காரணம், அப்போது இந்தியாவில் ARPU (Average Revenue Per User) குறைவாக இருந்ததுதான். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் சம்பாதிக்க முடியாமல் இருந்தன. எனவே புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்யவோ, ஊக்குவிக்கவோ யாரும் முன்வரவில்லை. தொலைத்தொடர்பு துறையில் இந்தியா சந்தித்த காலதாமதங்களுக்கு இதுதான் காரணம். 4G வரைக்கும் இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து தொழில்நுட்பங்களை வாங்கிக்கொண்டிருந்தது. நாம் எதையும் உருவாக்கவில்லை. ஆனால், 5G அப்படியல்ல. 

தற்போது இந்தியாவில் 5G-க்கான சந்தை மிகப்பெரிது. ARPU-வும் அதிகமாகிவிட்டது. எனவே 5G தொடர்பான ஆராய்ச்சிகளும் பெருமளவில் நடந்துகொண்டிருக்கின்றன. 4G போல இந்தமுறை தாமதம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்திய அரசும் இவற்றை ஊக்குவித்துவருகிறது.எனவே இந்தியா தனக்கான சொந்த 5G தொழில்நுட்பத்தை வடிவமைப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. இதுவரைக்கும் மற்ற நாடுகளிடம் இருந்து மட்டுமே தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொண்டிருந்த நாம் இந்தமுறை நாமே வடிவமைக்கவிருக்கிறோம். 

காலத்தின் கட்டாயம்:

3G-யில் இருந்து 4G-க்கு மாறி இன்னும் சில வருடங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் எதற்காக நாம் 5G-க்கு செல்லவேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். காலத்தின் தேவை என்பதுதான் அதற்கான பதில். 3G வரைக்குமே செல்லுலார் நெட்வொர்க்குகள் அனைத்தும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு மட்டுமே பயன்பட்டது. அப்போது நம்மிடம் இருந்ததெல்லாம் ஸ்மார்ட்போன்கள் மட்டும்தான். எனவே பேசவோ, இணைய வசதியை பயன்படுத்தவோ மட்டும்தான் 3G-யை பயன்படுத்தினோம். ஆனால், 4G வந்த சமயத்தில் இன்னொரு தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்தது; அது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் (Iot). கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் பொருள்கள், இயந்திரங்கள் என அனைத்தையுமே இணையத்துடன் சேர்த்து பயன்படுத்துவதுதான் இந்த இன்டர்நெட் ஆப் திங்க்ஸ். ஸ்மார்ட் ஹோம்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஸ்மார்ட்போன்களைப் போல இவை குறைவான டேட்டாவைப் பயன்படுத்தப்போவதில்லை.

அதிகளவிலான டேட்டாவை பயன்படுத்தும். ரோபோட்டிக் இயந்திரங்கள் அடங்கிய தொழிற்சாலை, ஓட்டுநர் இல்லாத கார், தானாகவே இயங்கும் வேளாண் கருவிகள் போன்றவையெல்லாம் இன்னும் சில காலத்திற்குள் நிஜமாகிவிடும். இவை அனைத்திற்குமே டேட்டாதான் ஆதார மூலம். இதுவரைக்கும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே செலவழித்த டேட்டாவை இனிமேல் இவையும் பங்கிட்டுக்கொள்ளப்போகின்றன. அந்தக் கூடுதல் டேட்டாவை தற்போதைய சிஸ்டத்தை பயன்படுத்தி எப்படி அனுப்பமுடியும்?

மேலும், நாம் பயன்படுத்தும் 4G-யின் வேகம் தற்போதைய பயன்பாடுகளுக்கு ஏற்றதுதான் என்றாலும், அதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. தகவல்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் இடையே சில மைக்ரோ நொடிகள் தாமதம் ஏற்படுவது அதில் ஒரு பிரச்னை. வாட்ஸ்அப்பில் சில நொடிகள் மெசேஜ் தாமதமாக செல்வதால், நமக்கொன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ரோபோக்களும், அதன் கன்ட்ரோல் சிஸ்டமும் ரியல் டைமில் இயங்கும் ஓர் இடத்தில் இந்த தாமதம் ஆபத்து அல்லவா? தொலைதூரத்தில் இருந்துகொண்டு இணையம் மூலம் ரோபோக்களை வைத்து ஒரு மருத்துவர் நோயாளியை பரிசோதிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அங்கே மருத்துவரின் ஒவ்வொரு கட்டளையும் உடனே ரோபோக்களுக்கு செல்ல வேண்டியது மிகமுக்கியம். ஆனால், மருத்துவர் கட்டளையிட்டு சில நொடிகளுக்குப் பின்னர்தான் ரோபோ இயங்குகிறது என்றால் மருத்துவரால் மேற்கொண்டு நோயாளியைப் பரிசோதிக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணவும், புதிதாக இணையப் போகிற பலமில்லியன் வாடிக்கையாளர்களை சமாளிக்கவும் நமக்கு 5G அதிஅவசியம்.


எப்படி உருவாகிறது 5G?

“5G என்பது புத்தம்புதிய தொழில்நுட்பம் கிடையாது. தற்போது நாம் பயன்படுத்திவரும் 4G நெட்வொர்க்கின் வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் 5G. இதற்கான தரத்தை சர்வதேச தகவல்தொடர்பு யூனியன் (ITU) நிர்ணயித்துள்ளது. அந்தத் தகுதிகளுடன்  5G-யை வடிவமைப்பதுதான் உலக நாடுகளின் பணி. உதாரணமாக ஒரு நொடியில் 10 GB டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் அளவிற்கு 5G திறன் பெற்றிருக்க வேண்டும் என ITU நிர்ணயித்தால், நாம் தயாரிக்கும் 5G அந்தளவு திறன்பெற்றிருக்க வேண்டும். எந்தநாடு முதலில் இதைச் செய்தாலும் அதனை ITU அங்கீகரிக்கும். இந்தத் தரக்கட்டுப்பாடுகளை நாம் எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் பூர்த்திசெய்யலாம். இது அந்தந்த நாடுகளின் திறமையைப் பொறுத்தது. 5G-யில் இதற்கு முன்பு இருந்ததை விடவும் இந்தமுறை சில புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

MIMO, ஸ்மால் செல் டெக்னாலஜி மற்றும் மில்லிமீட்டர் அலைகள் போன்றவை அவற்றுள் சில. இந்த மில்லிமீட்டர் அலைகள் இதுவரைக்கும் ராணுவ ரீதியான தகவல் தொடர்புக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. முதல்முறையாக சாதாரண தகவல் தொடர்புக்கு  பயன்படப் போகிறது. இந்த அலைகள் மூலம் நம்மால் மிகக்குறுகிய தூரத்திற்கு மட்டுமே தகவல்களை அனுப்பமுடியும். ஆனால், அதிகளவிலான டேட்டாவை அனுப்பமுடியும். இப்படி தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாறுதல்கள் இருந்தாலும், பயனாளரைப் பொறுத்தவரைக்கும் 4G-க்கும் 5G-க்கும் வேகத்தைத் தவிர எவ்வித வேறுபாடும் இருக்காது.” என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் மின்னியல் துறை பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

`சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி

1991-ல் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி'. அதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, இதே குறைபாடு உள்ளவராகத்தான் அப்படத்தில் நடித்திருப்பார். `ரெண்டு மோட்டார் சைக்கிள் வருது குறுக்கால போயிடலாம்னு...

அஜித் நியூ லுக்

நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபேற்பை...

வரவிருக்கும் செய்தி தாவல் அம்சத்தை நிர்வகிக்க மூத்த பத்திரிகையாளர்களை நியமிக்க பேஸ்புக்

பேஸ்புக் அதன் மொபைல் பயன்பாட்டின் ஒரு பகுதியான அதன் வரவிருக்கும் நியூஸ் தாவலுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு “சிறிய குழுவை” பத்திரிகையாளர்களை பணியமர்த்துவதன் மூலம் செய்திகளைக் கட்டுப்படுத்துகிறது. நியூஸ் தாவலில் உள்ள பெரும்பாலான...

Brexit பற்றி போரிஸ் ஜான்ஸன் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தவில்லை: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்ஸின் தங்களுக்கு எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் கூறுகையில், பிரிக்ஸிட்டுக்குப்...

இந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக்

கமலுஹாசனும், விவேக்கும் இயக்குநர் சிகரத்தின் அறிமுகம் என்றாலும், இது வரையிலும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை. இது பற்றிய தனது ஏக்கத்தை எத்தனையோ போது மேடைகளில் வெளிப்படுத்தியிருந்தார். யானைக்கும் அடிசறுக்கும் என்று சொல்வார்கள்....