முகப்பு செய்திகள் உலக செய்திகள் Brexit பற்றி போரிஸ் ஜான்ஸன் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தவில்லை: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

Brexit பற்றி போரிஸ் ஜான்ஸன் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தவில்லை: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்ஸின் தங்களுக்கு எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் நடாஷா பெர்டாட் கூறுகையில்,

பிரிக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனும், பிரித்தானியாவும் தொடர வேண்டிய உறவு குறித்த ஒப்பந்தம் தொடர்பாக அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எழுதியுள்ள கடிதம் திருப்திகரமாக இல்லை.

அந்தக் கடிதத்தில் அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையே பிரெக்ஸிட்டுப் பிறகும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்வதற்கான ஒப்பந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு மாற்றாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் அவர் தெளிவுபடுத்தவில்லை.

அயர்லாந்துக்கும், வடக்கு அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக ஒருங்கிணைப்பைத் துண்டித்த பிறகு, அயர்லாந்து தீவில் வர்த்தக எல்லை வகுக்கப்படுவதை எப்படி தடுப்பது என்பது குறித்த விளக்கத்தையும் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்குக்கு போரிஸ் ஜான்ஸனுக்கு எழுதிய கடிதத்தில், அயர்லாந்து நாட்டுக்கும், தங்களது வடக்கு அயர்லாந்து பகுதிக்கும் இடையே பிரக்ஸிட்டுக்குப் பிறகும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர், அயர்லாந்து தீவில் பிரித்தானியாவின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்து பகுதிக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக எல்லை எழுப்பினால், அது அந்தப் பகுதியின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பிரக்சிட்டுக்கு பிறகும் இரு பகுதிகளுக்கும் இடையே வர்த்த ஒருங்கிணைப்பை குறிப்பிட்ட அளவுக்கு தொடர்வது என பிரித்தானியா முன்னாள் பிரதமர் தெரசா மே-யும், ஐரோப்பிய யூனியன் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால் இது பிரித்தானியாவின் இறையாண்மையை பாதிக்கும் எனக் கூறி அந்த ஒப்பந்தத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்தது.

அதையடுத்து தனது பதவியை தெரசா மே ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக போரிஸ் ஜான்ஸன் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Must Read

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார்.

அமெரிக்கா: அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி, உறைவிட நிதிக்கு முதலீடுகளை திரட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி

மும்பை: வங்கதேசத்துடன் டெஸ்ட்  போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆடுகளம் எப்படி இருந்தாலும் எதிரணியை விட அதிக விக்கெட்டுகளை எடுப்போம் என்ற நம்பிக்கை முக்கியம்...

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில்...

சில்லி பாயின்ட்…

* விஜயநகரம், ஆந்திரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 129 ரன் (54 பந்து,...

துபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் துபாய் அரசு சார்பில் 6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் துபாயில் கடந்த 8, 9 தேதிகளில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற...