முகப்பு சினிமா `சிக்சர்' சர்ச்சை குறித்து கவுண்டமணி

`சிக்சர்’ சர்ச்சை குறித்து கவுண்டமணி

1991-ல் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம், சின்னத்தம்பி’. அதில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, இதே குறைபாடு உள்ளவராகத்தான் அப்படத்தில் நடித்திருப்பார். `ரெண்டு மோட்டார் சைக்கிள் வருது குறுக்கால போயிடலாம்னு நினைச்சேன்’ என்று இவர் செய்த காமெடிகளும், படத்தின் வசனங்களும் என்றென்றும் சிரிப்பு. அப்படியான காதாபாத்திரத்தை இமிடேட் செய்யும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையில் `சிக்சர்’ படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கவுண்டமணி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sixer movie

குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கக்கோரி படத் தயாரிப்பாளருக்கு கவுண்டமணி, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், படத்தில் கவுண்டமணியின் புகைப்படம் இடம்பெறும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இதற்காக தன்னிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை என்று கவுண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“என்னைப்பற்றி ஏதோ மிஸ்டேக் பண்ணியிருக்காங்கபோல. அது தப்பு இல்லையா?” என்று சொன்னவரிடம்,“உங்களையும், நீங்கள் நடித்த படங்களையும் நிறைய தமிழ்ப் படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்களே. திடீரென இப்போது ‘சிக்சர்’ படத்தில் ‘சின்னத்தம்பி’யில் நீங்கள் நடித்த வேடத்தை குறிப்பிட்டமைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏன்?” என்று கேட்டோம்.

“எனக்கு இன்னும் முழுசாக எதுவும் தெரியவில்லை, நான் நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தைப் பயன்படுத்தியுள்ள ‘சிக்சர்’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என முடித்துக்கொண்டார்.

முந்தைய கட்டுரைஅஜித் நியூ லுக்
அடுத்த கட்டுரைபிகில் விமர்சனம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Must Read

“தாத்தா, அப்பா பட்ட கஷ்டத்தையே எங்க புள்ளைங்களும் படணுமா?” – நயம்பாடி இருளர் மக்களின் கதை!

மழை அழகானது. இடைவெளிவிடாமல் தொடர்ந்து பெய்யும் போது மட்டும் பல்வேறு இன்னல்களைத் தந்துவிட்டுச் செல்கிறது. சில வாரங்கள் முன்னர், விட்டு விட்டுப் பெய்த மழையால் தமிழகமே புத்துணர்ச்சியடைந்தது. அதன் வெளிப்பாடாகச் சமூக ஊடகங்களில்...

“முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்…?!’’ – கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்று எடுத்துக்கொண்ட `லெக்ஃபீ', இந்தியா முழுக்க வைரலானது. (கைகள் எடுக்கப்படுவதை செல்ஃபி எனும்போது, பிரனவ் தன்...

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அர்த்தநாரிபாளையம் பகுதியில் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடிக்கும் பணி நான்கு நாள்களாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்....

`ஐந்தாகப் பிரிந்த 4 மாவட்டங்கள்’- தாலுகா விவரங்களை அடுக்கிய அரசாணை

தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் நான்கு மாவட்டங்களைப் பிரித்து ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுத் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன....

செல்ஃபி இல்லை… கில்ஃபி… செல்ஃபிட்டீஸ் பாதிப்பு பற்றித் தெரியுமா?

"நீங்கள் செல்ஃபி பிரியரா? அடிக்கடி செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து அதனால் வரும் லைக்குகளை விரும்புபவரா? நீங்கள் பதிவிடும் செல்ஃபிகளுக்கு அதிக லைக் வரவில்லை என்றால் உங்கள்...