முகப்பு சினிமா விமர்சனம் கைதி சினிமா விமர்சனம்

கைதி சினிமா விமர்சனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, லவ் ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றுதான் படகுழுவே இந்த படத்தை விளம்பரப்படுத்தியது. இப்படி வித்யாசமாக எடுக்கப்பட்டுள்ள கைதி படம் எப்படி இருக்கு? வாங்க பார்ப்போம்.

கதை:

போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ். நரேன் தலைமையிலான டீம் தான் அதை செய்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும் என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது வில்லன் கேங்.

அந்த சமயத்தில் 10 வருடங்கள் ஜெயிலில் இருந்த கார்த்தி தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.

அதன்பிறகு மொத்த போலீஸ் அதிகாரிகளும் ஒரு சூழ்ச்சியில் சிக்கி உயிர்பிழைக்கவே போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கார்த்தி உதவினால் தான் அவர்களை காப்பாற்ற முடியும் என்கிற நிலை.

கார்த்தி அவர்களுக்கு எப்படி உதவினார், அதில் வரும் தடங்கல்களை எப்படி சமாளித்தார், மகளை பார்த்தாரா? என காட்டியுள்ளது மீதி படம்.

படத்தை பற்றிய அலசல்:

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது கார்த்தி மட்டும்தான். மகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்கிற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக, மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என பேசும் அப்பாவாக பல காட்சிகளில் நடிப்பில் ஜொலித்துள்ளார். நரேன் அந்த போலீஸ் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தான். ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை த்ரில்லாகவே வைத்திருக்கிறது. படம் முழுக்க ஆக்க்ஷன் தான் என்றாலும், இடையிடையே செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் குறைவில்லை.

படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. இத்தனை சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

கிளாப்ஸ்:

– சாம் CSன் பின்னணி இசை. படத்தில் எந்த பாடல்களும் இல்லை என்பதால் படம் முழுக்க பின்னணி இசையில் தன் திறமையை காட்டியுள்ளார்.

– ரியலாக வடிவமைக்கப்பட்டிருந்த சண்டை காட்சிகள்.

பல்ப்ஸ்:

– அழுத்தமில்லாத வில்லன் கதாப்பாத்திரங்கள். நான்கு வில்லன்கள் இருந்தாலும் அன்பு என்ற ரோலில் நடித்தவரை தவிர மற்றவர்களுக்கு அதிகம் அழுத்தம் இல்லை. மெயின் வில்லனுக்கும் கார்த்திக்கும் என்ன சப்பந்தம் என்பதையே இரண்டாம் பாகத்திற்கு ஹிண்ட்டாக கொடுத்துள்ளனர்.

– சில இடங்களில் மிக மெதுவாக நகரும் திரைக்கதை.

– படம் எந்த ஓவர் பில்டப் மாஸ் காட்சிகளும் இல்லாமல் படு ரியலாக எடுக்கப்பட்டிருந்தாலும் அங்கங்கே இருக்கும் சில லாஜிக் குறைகளும் உள்ளன. பிரிட்டிஷ்காரன் செய்த கதவு ஜன்னல் என்றால் உடைக்கவே முடியாத என்ன?

மொத்தத்தில் ‘கைதி’ கார்த்திக்கு அடுத்த வெற்றி

முந்தைய கட்டுரைபிகில் விமர்சனம்
அடுத்த கட்டுரைஇந்தியா செய்திகள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Must Read

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார்.

அமெரிக்கா: அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி, உறைவிட நிதிக்கு முதலீடுகளை திரட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி

மும்பை: வங்கதேசத்துடன் டெஸ்ட்  போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆடுகளம் எப்படி இருந்தாலும் எதிரணியை விட அதிக விக்கெட்டுகளை எடுப்போம் என்ற நம்பிக்கை முக்கியம்...

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில்...

சில்லி பாயின்ட்…

* விஜயநகரம், ஆந்திரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கர்நாடகா அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 129 ரன் (54 பந்து,...

துபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் துபாய் அரசு சார்பில் 6வது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் துபாயில் கடந்த 8, 9 தேதிகளில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற...